Advertisment

அம்மாவாக போகும் பிக் பாஸ் பிரபலம்; வைரல் புகைப்படங்கள்

பிக் பாஸ் பிரபலம் நடிகை மதுமிதா கர்ப்பம்; வைரலாகும் புகைப்படங்கள்

author-image
WebDesk
New Update
அம்மாவாக போகும் பிக் பாஸ் பிரபலம்; வைரல் புகைப்படங்கள்

Bigg Boss Madhumitha Baby shower photos: நகைச்சுவை நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான மதுமிதா, கர்ப்பமாக உள்ளநிலையில், தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் உள்ள பெண் காமெடி நடிகைகளில் குறிப்பிடத் தகுந்தவர் மதுமிதா. திரைப்படங்களுக்கு முன்னர் சின்னத்திரைகளில் நடித்த வந்த இவர், சந்தானத்துடன் இணைந்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

முன்னதாக மதுமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து வந்தார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பெரிய திரைக்கு வந்த மதுமிதா, பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரம் ஏற்று பிரபலமானார்.

publive-image

இந்தநிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

publive-image

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மதுமிதா ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதே போல ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். ஆனால், சமீப காலமாக இவரை எதிலும் காண முடிவதில்லை.

publive-image

இதனிடையே, நடிகை மதுமிதா கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தான் நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: ஷிவாங்கி மாதிரியே பேசி கிண்டலடித்த சிவகார்த்திகேயன்; ‘டான்’ பட விழாவில் கலகல…

இப்படி ஒரு நிலையில் மதுமிதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் அவருக்கு சீமந்தம் நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மதுமிதா கர்ப்பமாக இருப்பதால் தான் சமீப காலமாக நிகழ்ச்சிகளிலும் படங்களில் நடிப்பதில் இருந்தும் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment