Advertisment

பிராது குடுக்குறேன்னு இப்படியா செய்றது? நம்மளும் குடுப்போம்ல பிராது!

Bigg Boss Tamil: கடந்த எபிசோட்களில் மீரா மிதுன், சேரன் மீது புகார் கிளப்பினார். இது ரசிகர்களின் மத்தியில் சேரன் மீது பரிதாபத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss tamil promo

Bigg Boss tamil promo

Bigg Boss Promo: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 34-வது நாளாக ஒளிப்பரப்பு செய்யப்படவிருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியிலிருந்து, ஃபாத்திமா பாபு, வனிதா விஜயக்குமார், மோகன் வைத்யா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டு விட்டார்கள்.

Advertisment

Bigg Boss Tamil: நீங்க ஏன் அங்க போனிங்க? – சேரனுக்காக வருத்தப்படும் ரசிகர்கள்

இதற்கிடையே வார நாட்களில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். வார இறுதியில் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்திப்பார் கமல். அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் அந்தந்த வாரத்தில் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்படும். தேவையென்றால் குறும்படமும் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில், “தீராத பிரச்னையைக் கூட தீத்து வைக்கிற இடம் கிராம சபைன்னு பேசுற ஆளு நானு. உள்ள என்ன பேசிட்டு இருக்காய்ங்கன்னு பாத்தீங்கள்ல, நாட்டாமையையே போட்டு நொறுக்கிபுட்டாய்ங்க, அவரும் நொறுங்கிட்டாரு. பிராது குடுக்குறேன்னு இப்படியா செய்றது? நம்மளும் குடுப்போம்ல பிராது" என கமல் கூறுவது இடம் பெற்றுள்ளது.

கடந்த எபிசோட்களில் மீரா மிதுன், சேரன் மீது புகார் கிளப்பினார். இது ரசிகர்களின் மத்தியில் சேரன் மீது பரிதாபத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment