Advertisment

'எப்படி அதுக்குள்ள பொண்ணு பார்க்க வர சொன்னுச்சு?' - மீரா மிதுன் அட்ராசிட்டியும், சேரனின் வருத்தமும்!

எப்படி இந்த பொண்ணு, வந்த ரெண்டு வாரத்துல, ஒரு பையனை பார்த்து 'வீட்டில் வந்து பொண்ணு கேளு-னு சொல்லுது?' என்று நவயுக ஹைடெக் மீரா மீதான ஆதங்கத்தை சேரன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg boss promo meera mithun, dharshan, kamalhaasan - 'எப்படி அதுக்குள்ள பொண்ணு பார்க்க வர சொன்னுச்சு?' - மீரா மிதுன் அட்ராசிட்டியும், சேரனின் வருத்தமும்!

Bigg boss promo meera mithun, dharshan, kamalhaasan - 'எப்படி அதுக்குள்ள பொண்ணு பார்க்க வர சொன்னுச்சு?' - மீரா மிதுன் அட்ராசிட்டியும், சேரனின் வருத்தமும்!

பிக்பாஸ் இல்லத்தில், வனிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்களும் மீளவில்லை, ரசிகர்களும் மீளவில்லை. பிரச்சனைகளை உருவாக்குவதில் ஜித்து ஜில்லாடியாக விளங்கிய வனிதா, சமூக தளங்களில் விமர்சிக்கப்பட்டாலும், 'அவர் இருந்தால் தானே வீட்டில் பிரச்சனை இருக்கும்?... இல்லையெனில், சுவாரஸ்யமே இருக்காதே' என அனைவரும் லாஜிக் பேசிக் கொண்டிருக்கும் அவல நிலையை நம்மால் பார்க்க முடிகிறது.

Advertisment

இந்நிலையில், பிக்பாஸுக்கான இன்றைய புரமோவில் சில காதல் காட்சிகளை நம்மால் காண முடிகிறது. முகினுக்கு அபிராமி 'ஐ லவ் யூ' சொல்ல, ஏற்கனவே தர்ஷனிடம் காதல் விருப்பத்தை தெரிவித்து, 'என் அம்மாவிடம் வந்து பெண் கேள்' என்று ஹை ஸ்பீடில் சென்ற மீரா மிதுன் பற்றி சேரன் புலம்புவதும் புரமோவில் இடம் பெற்றுள்ளது. 'எப்படி இந்த பொண்ணு, வந்த ரெண்டு வாரத்துல, ஒரு பையனை பார்த்து 'வீட்டில் வந்து பொண்ணு கேளு-னு சொல்லுது?' என்று நவயுக ஹைடெக் மீரா மீதான ஆதங்கத்தை சேரன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க,

கவினை காதலித்த அபிராமி, இப்போ முகினை காதலிக்கிறார்...

கவினை காதலித்த சாக்ஷி இன்னமும் அவர் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்...

கவின் லோஸ்லியாவை ஒன்சைடாக லவ்வுகிறார்...

அப்போ லோஸ்லியா யாரை காதலிக்கிறார்...?

என்று அருகில் இருக்கும் நண்பர் யாரிடமோ தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்க, நமக்கு மயக்கமே வந்துவிட்டது!.

 

Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment