வெளியேறும் நொச நொச…. கேள்வியால் அதிர்ந்த பட பட…! – பிக்பாஸ் 50வது நாள் அட்ராசிட்டி
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று சாக்ஷி வெளியேறுவதாக சமூக தளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. சூழலும் அவருக்கு எதிராக இருக்க, அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன
bigg boss promo today kamal haasan sakshi dharshan -வெளியேறும் நொச நொச…. கேள்வியால் அதிர்ந்த பட பட…! – பிக்பாஸ் 50வது நாள் அட்ராசிட்டி
பிக்பாஸ் தமிழ் சீசன் 3ன் 50வது நாளில் வீட்டில் இருந்து சாக்ஷி வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இன்று பிக்பாஸ் வீக் எண்ட் எலிமினேஷன் பிராசஸ் நடைபெற உள்ளது. சரவணின் அதிர்ச்சி வெளியேற்றத்திற்கு நேற்று எந்த காரணமும் தெரிவிக்காத கமல்ஹாசன், இன்று முறைப்படி யார் வீட்டில் இருந்து வெளியேறப் போவது என்பதை அறிவிக்க உள்ளார். அதுகுறித்த புரமோஸ் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், லோஸ்லியா காப்பாற்றப்பட, மீதமிருக்கும் அபிராமி மற்றும் சாக்ஷி இருவரில் யார் வெளியேறப் போவது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து உயிர்த் தோழிகளாக வலம் வந்தவர்கள் சாக்ஷியும், அபிராமியும்.
ஆனால், அதன்பின் பல பிரச்சனைகளால், சாக்ஷி கேங்கில் இருந்து அந்நியப்பட்டார் அபிராமி. இதன் பிறகு, அவரது கேரக்டரே மாறியது. அதேசமயம், ஷெரினுடன் இதுநாள் வரை நெருங்கியே பழகி வந்தார் சாக்ஷி. ஒருக்கட்டத்தில் அந்த நெருக்கமே ஷெரினுக்கு எரிச்சலாகிப் போக, மக்களும், ‘அட என்னப்பா இது நொய்.. நொய்-னு’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று சாக்ஷி வெளியேறுவதாக சமூக தளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. சூழலும் அவருக்கு எதிராக இருக்க, அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
மற்றொரு புரமோவில், மதுமிதாவிடம் கேள்விக் கேட்ட நேயர் ஒருவர், நீங்கள் வந்த புதிதில் நேர்மையாக தெளிவாக நடந்து கொள்வது போல் இருந்தது. ஆனால், ‘வர வர நீங்கள் நடிப்பது போல் தெரிகிறதே’ என்று கேட்க, மதுவை பார்க்கணுமே….!