ரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி... விரைவில் டும் டும் டும்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தனது திருமணம் பற்றின அறிவிப்பை சமீபத்தில் பங்குக்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன.

ரித்விகா திருமணம்

இந்நிலையில், ரித்விகா விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, என்கிற தகவலை ஒரு படவிழாவில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும், திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது.

என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன்.ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன்.புதிய படங்கள் எதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் தான் முடிவு செய்வார்.” என்று கூறியிருக்கிறார்.

இவரின் முடிவை பாராட்டி பலர் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தாலும். சிலர் இவர் நடிப்புக்கு முழுக்கு போடுவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close