பிக் பாஸ் 2 வீட்டிற்குள் அழும் மும்தாஜ் மற்றும் பாலாஜி... காரணம் இது தான்!

பிக் பாஸ் 2 வீட்டிற்குள் கடந்த சீசன் போலவே இந்த சீசனிலும் ஃப்ரீஸ் டெக்னிக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் மும்தாஜ்க்கு இன்பதிர்ச்சியும், பாலாஜிக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

பிக் பாஸ் 2 ஃப்ரீஸ் :

சீசன் 1ல் ஃப்ரீஸ் டெக்னிக் அறிமுகப்படுத்தப்பதை நாம் அனைவரும் பார்த்தோம். இந்த விளையாட்டில், பிக் பாஸ் போட்டியாளர்களை ஃப்ரீஸ் என்று சொல்வார். அப்போது அனைத்து போட்டியாளர்களும் எந்த அசைவுமின்றி நிற்க வேண்டும்.

அப்போது திடீரென வீட்டின் கதவு திறக்கும். அதன் வழியே போட்டியாளர்களில் ஒருவரின் உறவு முறைக் கொண்ட நபர்கள் உள்ளே வருவார்கள். அவர்கள் பெற்றோர், உறவினர்கள் அல்லது நண்பர்களாகவும் இருப்பார்கள்.

அந்த வகையில், பிக் பாஸ் 2 வீட்டிற்குள் ஃப்ரீஸ் என்று சொன்னவுடம், மும்தாஜ் தாய் மற்றும் சகோதரன் உள்ளே நுழைகிறார்கள். அவர்களை பார்த்தவுடன், பாசப்பிணைப்பில் ஆனந்த கண்ணீர் விட்டு கட்டி அணைத்து உணர்வுகளை பகிர்கிறார்கள்.

வழக்கம் போல சில நேரத்தில், மும்தாஜ் தாய் மற்றும் சகோதரர் வெளியே செல்கின்றனர். இந்த ஆனந்தமான நிகழ்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் வீட்டின் உள்ளே இருக்கும் ஸ்டோர் ரூம் மணி அடிக்கிறது. அதில் பாலாஜிக்கு ஒரு சிறிய பரிசும் கடிதமும் காத்திருக்கிறது.

பரிசு பொட்டளத்தின் உள்ளே அவரது மகள் போஷிகா அனுப்பிய, பார்பி பொம்மை இருக்கிறது. பின்னர் நித்யா அனுப்பிய கடிதத்தை படிக்கிறார். அதில் “நான் உங்களுக்கு ஒரு தோழியாக ஆதரவாக இருப்பேன்… தோழியாக மட்டும் தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்த பிறகு கண்ணீர் விட்டு அழிகிறார் பாலாஜி.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close