Advertisment

பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் நுழையும் பிரபலத்தால் ஏற்படும் கலகம்

Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கஜினிகாந்த் படக்குழுவினர் வருகை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss tamil 2 பிக் பாஸ் தமிழ் 2

bigg boss tamil 2 பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் நுழைக்கிறார் நடிகர் ஆர்யா, காமெடியன் சதீஷ் மற்றும் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி. கஜினிகாந்த் பட வெளியீட்டைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கஜினிகாந்த் படக்குழுவினர் :

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே புதிதாக வெளியாக இருக்கும் படத்திற்கான புரோமோஷனுக்காக படக் குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். முதலில் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக படத்தின் குழுவினர் உள்ளே சென்றனர்.

பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் வந்தது குறித்த செய்தி

இவர்களைத் தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் படத்திற்காக படத்தின் இசைக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இதையடுத்து இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், கஜினிகாந்த் படத்தின் குழுவினர் உள்ளே வருகின்றனர்.

bigg boss tamil 2 bigg boss tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்குள் கஜினிகாந்த் படக்குழு

நடிகர் ஆர்யா, நகைச்சுவை நடிகர் சதீஷ், இயக்குநர் என அனைவரும் அந்தத் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியுடன் வருகின்றனர். இதற்கான புரோமோ வெளியாகியுள்ளது.

புரோமோவில் உள்ளே வந்த சதீஷ், ராணி ராஜ்ஜியம் டாஸ்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியது பற்றி கேட்கிறார். உடனே இது ஒரு பிரச்சனையாக அந்த வீட்டில் வெடிக்கிறது.

முன்னதாக கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக வந்த கார்த்தி வீட்டின் சுத்தம் பற்றி கலகம் செய்து சென்றார். இப்போது சதீஷ் என்னவெல்லாம் செய்ய இருக்கிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment