பிக் பாஸ் தமிழ் 2: விஸ்வரூபம் 2 பாடல் ரிலீஸ்... மமதி சாரி எவிக்‌ஷன்!

Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு பாடலை இன்று வெளியிடுகிறார் நடிகர் கமல் ஹாசன்.

Bigg Boss 2: கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சிசன் 2 வில், விஸ்வரூபம் 2 படத்தின் பாடலை இன்று அவர் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதையடுத்து இந்த நிகழ்ச்சி இன்று பிக் பாஸ் தமிழ் 2 மேடையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் அரங்கேரிய விஸ்வரூபம் 2 படத்தில் பாடல் வெளியீடு:

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சியை தொகுதி வழங்கிய போது, கட்டைசியாக, ‘‘வித்தியாசமான முயற்சியாக இந்த நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடலை வெளியிடலாம் என இருக்கிறேன்’’ என்று அறிவித்தார்.

படத்தின் பாடலை பிக் பாஸ் தமிழ் 2 மேடையில் பாட இருக்கிறார்கள் கமல் ஹாசன் மற்றும் அவரது மகள் சுருதி ஹாசன்.

10.35 pm : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் போட்டியில் இருந்து முதல் நபராக மமதி சாரி எவிக்ட் செய்யப்பட்டார்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இருந்து மமதி வெளியேறுகிறார்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இருந்து மமதி வெளியேறுகிறார்

10.07 pm: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டை தொடர்ந்து நேரடியாக எவிக்‌ஷன் சுற்றுக்கு சென்றார் கமல் ஹாசன். மும்தாஜ், மமதி மற்றும் அனந்த் வைத்தியநாதன் ஆகியோரிடம் உரையாடினார் கமல்.

9.38 pm: விஸ்வரூபம் படத்தின் 2வது பாடலை மேடையில் பாடினார் ஸ்ருதி ஹாசன். “எவன் என்று நினைத்தாய்” என்ற பாடலை ஸ்ருதி பாடினார். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் இருந்தார்.

Bigg Boss Tamil 2: மேடையில் பாடிய ஸ்ருதி

Bigg Boss Tamil 2: மேடையில் பாடிய ஸ்ருதி

9.25 pm: விஸ்வரூபம் 2 படத்தில் பாடல் வெளியீட்டை தொடர்ந்து, படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டார் கமல் ஹாசன்.

9.20 pm: ஸ்ருதி ஹாசனுடன் ஆங்கிலத்தில் ஒரு கலக்கு கலக்கினார் போட்டியாளர் சென்ராயன். இவரை தொடர்ந்து ஸ்ருதி ஹாசனுடன் பேச அதிக ஆர்வம் காட்டினார் டேனியல். அப்போது “சார் நம்ம அடுத்த வாரம் பேசிக்கலாம். இப்போ ஸ்ருதி கூட பேசிக்கிறேன்” என்று கேலிக்கையாக தொடங்கினார் டேனியல்.

9.15 pm: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசனை வாழ்த்தினார்கள்.

9.11 pm: மேடையில் தனது மகள் பாடகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அது நிறைவேறியதை கண் முன்பு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார் கமல். மேலும் இந்த பாடலை பாடிய ஸ்ருதி ஹாசனை கமல் பாராட்டினார்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: மேடையில் தனது மகளை புகழ்ந்தார் கமல் ஹாசன்

9.07 pm: விஸ்வரூபம் 2 படத்தில் முதல் பாடல் “நானாகிய நதிமூலமே” என்ற பாடலை வெளியிட்டார் கமல் ஹாசன். கமல் ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடினார்கள்.

9.05 pm: பிக் பாஸ் தமிழ் 2 மேடைக்கு வந்தார் கமல் ஹாசன். பாடல் வெளியீடு நிகழ்வு தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்காக  ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close