பிக் பாஸ் 2 புதிய ப்ரமோ : என்ன சொல்ல நினைக்கிறார் கமல் ஹாசன்?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோ நேற்று வெளியானது. முதல் ப்ரமோவை பார்த்த அனைவரும், நேற்று வெளியான ப்ரமோவில் காத்திருந்தது புதிய டுவிஸ்ட்.

பிரபல சேனலில் சென்ற ஆண்டு வெளியான ஷோ பிக் பாஸ் இந்த வருடமும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்காக முதல் ப்ரமோ கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் புதிய ப்ரமோ நேற்று வெளியிடப்பட்டது. முதல் ப்ரமோவில் முக்கிய கருத்தை கூறிய கமல் ஹாசன், இந்த ப்ரமோவில் அதனை இன்னும் தெளிவு படுத்துவது போல் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளது நிகழ்ச்சியின் குழு.

இந்த இரண்டு ப்ரமோவிலும் என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்? அதற்கு முன்பு முதல் ப்ரமோவை பாருங்கள்:

பார்த்தீர்களா? அந்த சிறுவனை காப்பற்றவே இந்த இளைஞர் பெண்ணை இடித்துவிட்டு ஓடுகிறார். இதைப்பார்த்து நாம் அனைவரும் ‘ஆமா ஆமா சரி தான். பார்த்த உடனே தப்பா நினைத்துவிட்டோமே’ என்று எண்ணலாம். ஆனால் இரண்டாவது பிரோமோவில் ‘அவ்வளவு நல்லவராக யோசிக்க வேண்டாம். இதுவும் ஒரு வகையில் திருட்டு வேலைதான்’ என்று நமக்கு புரிய வைக்கிறது.

ஆனால் இந்த இரண்டாம் ப்ரமோ வருவதற்கு முன்பே இதில் ஒரு ரகசியம் உள்ளதென்று மறைமுகமாக ஹிண்ட் கொடுத்திருக்கிறார்கள் ப்ரமோ குழுவினர். என்ன அது? நீங்கள் நன்றாக கவனித்தால் முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன் கடிக்க முயலும்போது, அவர் கையில் இருக்கும் ஆப்பிள் மாயமாக மறையும். அதன் மூலம் இதில் ஏதோ ஒரு மாயை உள்ளது என்று நாமெல்லாம் நினைத்திருப்போம்.

அதை அச்சு அலசாக காண்பித்திருக்கிறார்கள் 2வது ப்ரமோவில். எந்த சிறுவனை காப்பாற்ற ஒரு பெண்ணை இடித்துவிட்டு இளைஞர் ஓடினாரோ, அதே இளைஞர் தான் அந்த பெண்ணின் தங்க சங்கிலியை திருடி செல்கிறார். கீழே விழுந்த பழங்களை எடுக்கும் பெண், செயின் திருடு போனதை உணர்ந்து பதற்றமடைய, கமல் ஹாசன் ஒரு லுக்கு விடுகிறார்.

அதற்கு அர்த்தம், அனைவரும் நல்லவர் அல்ல, சிலர் நல்லவர் போல வேடமிட்டு நம்மை ஏமாற்றுவார்கள் என்பதே. முக்கியமாக நீங்கள் இன்னும் ஒன்று கவனிக்க வேண்டும். முதல் ப்ரமோவில் தவறவிட்ட ஆப்பிளை இந்த ப்ரமோவில் கடித்து சாப்பிடுகிறார். அதாவது தப்பி சென்ற கல்வன் பிடிபட்டார் என்று கூறுகிறார்.

சென்ற ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே இப்படி இரண்டு மூன்று நபர்களை சந்தித்தோம். இந்த ஆண்டும் இது போன்ற பல கேரக்டர்கள் இருக்கும் உஷார் என்று நமது அந்த ப்ரமோ மறைமுகமாக கூறுகிறது.

×Close
×Close