மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடப்பது என்னவென்று!

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இன்று நடைபெறும் டாஸ்கில், 15 போட்டியாளர்களும் தாங்கள் அதிகம் விரும்பும் நபரை பற்றி...

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தமிழக மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரை எவ்வித வெளித் தொடர்பும் இல்லாமல் ஒரே வீட்டில் தங்கவைத்து, அவர்களில் யார் 100 நாட்கள் வெற்றியுடன் பயணிக்கிறார் என்பதே போட்டியின் கதை. அந்த வகையில் இந்த ஆண்டின் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் 2 போட்டியில் உருக்கமாக அன்பை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள்:

முதல் இரண்டு வாரங்கள் போட்டியில் இருந்து முதல் நபராக மமதி சாரி வெளியேற்றப்பட்டார். எனவே அவரின் எவிக்‌ஷனுக்கு பிறகு 15 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் 2 வீட்டின் உள்ளே வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தினமும் ஏதோ ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை அவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்தாலும், போட்டிகளின் இடையே ஏற்படும் மோதலின் காரணமாக அவர்களுக்கு இடையே இருந்த நல்லுறது மெதுவாக சிதையத் தொடங்கியுள்ளது.

Bigg Boss Tamil 2 promo

பிக் பாஸ் தமிழ் 2 போட்டியில் அன்பை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள்

ஆனால் இவை அனைத்தும் மீண்டும் சரி செய்யும் வகையில் இன்று நடைபெறுகிறது ஒரு டாஸ்க். போட்டியாளர்கள் 15 பேரும் தாங்கள் அதிகமாக விரும்பும் நபர் யார்? ஏன்? என்று அனைவரின் முன் நின்று பேச வேண்டும். இதன் பிரமோ இன்று வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பாலானோர் தங்களின் குடும்பத்தினரையே தேர்வு செய்து அவர்களை அதிகமாக விரும்பும் காரணத்தை உருக்கமாக விவரிக்கின்றனர். ரித்விகா, நித்யா மற்றும் டேனியல் ஆகியோர் தங்களின் அப்பாவை கண்ணீர் மல்கப் பேசுகிறார்கள். மேலும் பாலாஜி தான் அதிகமாக விரும்பும் நபர் தனது மகள் போஷிக்கா தான் என்று மனமுருக அன்பைப் பகிர்கிறார்.

×Close
×Close