Bigg Boss Tamil 3 Contestants list: பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்கள் யார், யார்? முழு ரிப்போர்ட்

யாரெல்லாம் கலந்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற  எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், தற்போது அந்த ரகசியம் உடைக்கப்பட்டிருக்கிறது.

Bigg Boss Contestants Full List and Profile

Bigg Boss Tamil Contestants: ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நேற்றிரவு தொடங்கி விட்டது.

கடந்த ஒரு மாதமாகவே இதில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற  எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், தற்போது அந்த ரகசியம் உடைக்கப்பட்டிருக்கிறது. நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் பிக்பாஸ் தொகுப்பாளரான கமல்.

1. பாத்திமா பாபு

இதில் முதல் போட்டியாளராக களம் இறங்கியவர், செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு.

Bigg boss tamil season 3, fathima babu

பாண்டிச்சேரியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாய்ப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு 1996-ல் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘கல்கி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கும் அறிமுகமானார். மலையாளப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் சீரியல்களையும் விட்டு வைக்கவில்லை!

2. லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது போட்டியாளர் லொஸ்லியா.

Bigg Boss 3 Losliya

இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்த இவர், மாடலிங் துறைக்குள் நுழைந்து பின்பு செய்தி வாசிப்பாளரானவர்.

3. சாக்‌ஷி அகர்வால்

மூன்றாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியவர் சாக்‌ஷி அகர்வால்.

Bigg Boss Tamil Season 3 Sakshi Agarwal

உத்திரகாண்டின் அல்மோரா நகரத்தில் பிறந்த இவர், பின்னர் பெற்றோர்களோடு சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இளங்கலை தொழில் நுட்பமும், பெங்களூரில் எம்.பி.ஏ மற்றும் லாஸ் ஏஞ்ஜல்ஸில் புரபஷனல் ஆக்டிங் கோர்ஸையும் முடித்திருக்கிறார். 2011-ல் திருமணமாகி பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக, அது ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013-ல் நடிப்புத் துறைக்கு வந்த இவர் 100-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம் ஆகியவைகள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

4. மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது போட்டியாளர் காமெடி நடிகை மதுமிதா.

Bigg boss tamil season 3 madhumitha

2012-ல் உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘ஓகே ஓகே’ படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இருப்பினும் இவரது திரை வாழ்க்கை 2004-2007-ல் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் தான் தொடங்கியது. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

5. கவின் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது மற்றும் முதல் ஆண் போட்டியாளர் கவின்.

Bigg Boss Tamil Season kavin2

திருச்சியில் பிறந்த இவர், விஜய் தொலைக்காட்சியின் ’கனா காணும் காலங்கள் – 3’ யில் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர். பின்னர் வெள்ளித்திரையில் ‘நட்புன்னா என்ன தெரியுமா?’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

6. அபிராமி வெங்கடாச்சலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது போட்டியாளர் அபிராமி வெங்கடாச்சலம் என்கிற அபிராமி ஐயர்.

Bigg boss tamil season abhirami venkatachalam

சென்னையைச் சேர்ந்த மாடலான இவர் 2017-ல் ‘களவு’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது அஜித் நடித்திருக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார்.

7. சரவணன்

மூன்றாவது சீசனான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7-வதாக களமிறங்கியவர் ‘பருத்தி வீரன்’ சரவணன்.

Bigg boss tamil season 3 saravanan

1992-ல் ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், 1998 வரை முன்னணி கதாபாத்திரங்களிலும் 2001-க்குப் பிறகு சப்போர்ட்டிங் ரோல்களிலும் நடித்து வருகிறார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘பருத்தி வீரன்’ படம் சரவணனுக்கு சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது.

8. வனிதா விஜயக்குமார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது போட்டியாளர் வனிதா விஜயக்குமார்.

Bigg Boss Tamil Season 3 vanitha vijayakumar

நடிகர் விஜயக்குமார் – மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான இவர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ’மாணிக்கம்’ உட்பட சில படங்களில் நடித்த இவர், அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மூலம் மக்களிடம் பிரபலமானார்.

9. சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது போட்டியாளர் இயக்குநர் சேரன்.

Bigg Boss Tamil Season 3 cheran

மதுரையில் பிறந்த இவர், 1997-ல் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல குடும்பப் படங்களை இயக்கிய இவர் 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதோடு 8 தமிழக அரசு விருதுகள், 5 ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

10. ஷெரின்

இந்நிகழ்ச்சியின் 10-வது போட்டியாளர் நடிகை ஷெரின்.

bigg boss 3, sherin

பெங்களூரில் பிறந்த இவர், தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விசில், பீமா, நண்பேண்டா உட்பட சில கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

11. மோகன் வைத்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11-வது போட்டியாளர் மோகன் வைத்யா.

Bigg Boss Tamil Season mohan vaidhya2

கடந்த முறை ஆனந்த் வைத்தியநாதனைப் போல் இந்த முறை மோகன் வைத்யா களம் இறங்கியிருக்கிறார். கர்நாடக இசைப் பாடகரான இவர் சாய் சிஷ்யா என்ற இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.

12. சாண்டி

இந்நிகழ்ச்சியில் 12-வதாக களம் இறங்கியவர் நடன இயக்குநர் சாண்டி.

Bigg Boss Tamil Season sandy

கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாடா’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, பின்னர் சினிமா உலகிலும் பிரபலமானார். குறிப்பாக ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றினார். பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த காஜல் பசுபதி, சாண்டியின் முன்னாள் மனைவி. 2009-ல் திருமணம் செய்த இவர்கள் பின்னர் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து 2017-ல் தன்னிடம் நடனம் பயின்ற மாணவி சில்வியாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

13. தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது போட்டியாளர் தர்ஷன்.

Bigg-Boss-Tharshan

இலங்கையைச் சேர்ந்த இவர், பல முண்ணனி தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ளார். 2018-ல் வெளியான ‘வேறென்ன வேண்டும்’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கும் அறிமுகமாகியுள்ளார்.

14. முகென் ராவ்

நிகழ்ச்சியின் 14-வது போட்டியாளர் முகென் ராவ்.

bigg boss tamil 3 Mugen rao

மலேசிய தமிழரும் பாடகருமான இவருக்கு மலேசியாவில் பல விசிறிகள் உள்லார்களாம். இவருக்கு சிறந்த தொலைக்காட்சி நாடகக் கலைஞர் விருது கொடுக்கப்பட்டதாக ‘வர்ணம்’ மலேசிய இணையத்தளம் குறிப்பிடுகிறது.

15. ரேஷ்மா 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது மற்றும் இறுதி போட்டியாளர் ரேஷ்மா.

Bigg Boss tamil 3 reshma

 

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகர் பாபி சிம்ஹாவும் ரேஷ்மாவும் நெருங்கிய உறவினர்கள். அந்த வகையில் பாபியின் சகோதரி இவர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 contestants list full profile photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com