Advertisment

Bigg Boss Tamil: ஓட்டு வீணா போகல: மீராவை வெளியேற்றிய நிம்மதி பெருமூச்சில் பார்வையாளர்கள்!

Bigg Boss Tamil: தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதம். அதை இழக்கும் போது மீராவுக்கு அறிவுரை கூறும் அருகதை நமக்கும் இல்லாமல் ஆகிவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Meera Mithun

Bigg Boss Meera Mithun

Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து 4-வது நபரும் வெளியேற்றப்பட்டு விட்டார். கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாஸன் 3-வது முறையாக தொகுத்து வழங்குகிறார்.

Advertisment

16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியிலிருந்து ஃபாத்திமா பாபு, வனிதா விஜயக்குமார், மோகன் வைத்யா என மூவர் அடுத்தடுத்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த வாரம் 4-வது நபராக மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார்.

சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், மீராவுக்கும் சேரனுக்குமான பிரச்னை குறித்து பேசப்பட்டது. அப்போது சேரனுக்கு ஆதரவான கருத்துக்கள் எழுந்து, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது.

நேற்று வழக்கம் போல எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களிடம் டென்ஷனை ஏற்படுத்தி விட்டு, சரவணன், அபிராமி, கவின் என ஒவ்வொருவராக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதை அறிவித்தார் கமல். பின்னர் சாக்‌ஷியா மீராவா என்றிருக்கையில், மீராவின் பெயரை வாசித்தார்.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதம். அதை இழக்கும் போது மீராவுக்கு அறிவுரை கூறும் அருகதை நமக்கும் இல்லாமல் ஆகிவிடும் என மீராவை மேடைக்கு அழைக்கும் முன் பார்வையாளர்களிடம் கூறினார் கமல். அதை தொடர்ந்து மீராவுக்கான பிரியா விடை வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. பின்னர் அங்கிருந்து விடைப்பெற்றார் மீரா.

பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றவர்களை ”ஹீரோ, வில்லன், ஜீரோ” என்று தேர்வு செய்யும் டாஸ்கை வழங்கினார் கமல்ஹாசன். இதில் அதிகளவிலான வில்லன் பட்டங்களை பெற்றார் தர்ஷன். அவரை தொடர்ந்து ஹீரோவுக்கான பட்டங்களை அதிகம் பெற்றார் சேரன்.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment