Bigg Boss Tamil 3 Episode (105):பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யார் என்று இன்று ( அக்டோபர் 6ம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. முகென் மற்றும் லாஸ்லியாவுக்கும் இடையே கடும்போட்டி நிலவுவதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
100 நாட்களுக்கும் மேலாக மக்களை, விஜய் டிவி முன்பு கட்டிப்போட்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்றுடன் முடிவடைய உள்ளது. முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே, இந்த சீசனையும் தொகுத்து வழங்கினார். நான்காவது மற்றும் ஐந்தாவது சீசன்களையும் கமலே தொகுத்து வழங்குவார் என்று விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் 3 இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 500 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறது.கதவு திறக்கும் கனவு மலரும் காட்சி தொடரும். எல்லாவற்றிற்கும் பின்னாடியும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது தானியங்கி திறக்கும் கதவு அல்ல. நாம் இயங்கி திறக்கும் கதவு. இதற்காகவே 6 அல்லது 7 பேர் இருக்கிறார்கள். இந்த கதவுக்கே இத்தனை பேர் என்றால், அந்த வீட்டிற்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.
105வது நாள் ஹைலைட்ஸ்
நிகழ்ச்சியின் போது ரஜினியின் பேட்ட படத்தின் எத்தனை சந்தோஷம் என்ற பாடலுக்கும், மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கும் போட்டியாளர்கள் டான்ஸ் ஆடினர். அப்போது, நிறைய கலைஞர்கள் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடியதைத் தொடர்ந்து, பல நாட்களுக்குப் பிறகு இத்தனை கலைஞர்களுடன் டான்ஸ் ஆடினேன். நடனக் கலைஞனா, கலைஞர்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி பிக் பாஸ். இது தரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற போட்டியாளர்களின் நினைவுகளை எடுத்துச் செல்லும் விதமாக டீசர்ட்டில் ஒருவருகொருவர் குறுஞ்செய்தி எழுதிக் கொண்டனர். அப்போது என்னை எப்போதும் உன் இதயத்தில் சுமந்து செல் என்று முகெனுக்கு ஷெரினும், உன் எதிர்காலம் உன்னைப் போல் அழகானது என்று லோஸ்லியாவிற்கு முகெனும் எழுதினர்.
பின் கன்டெஸ்டண்ட்கள் ஒவ்வொருவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்
சாண்டி : வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம் மெயின் டோர் தான். எல்லோரையும் வரவேற்பதும் அது தான், ஆட்டம் காட்டினால், வெளியே அனுப்புவதும் அது தான். வந்தாரை வாழ வைக்கும் தெய்வம். யாரேனும் ஆட்டம் காட்டினால் கிளம்புறா என்று சொல்வதும் அந்தடோர்தான் என்றார். என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த பார்வையாளர்களுக்கு நன்றி. இவ்வாறு சாண்டி கூறியுள்ளார்.
லாஸ்லியா : இந்த வீட்டிற்கு என்று ஒரு உணர்வு இருக்கிறது. விளையாடத்தான் வந்தேன். ஆனால், இங்கிருந்து வெளியேறுவது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் யாருடனும் அதிகளவில் ஒன்று சேரக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை. பிக் பாஸ் அனுபவத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. இருந்து பார்த்தால்தான் தெரியும். லாஸ்லியாவை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இப்போது அவர்கள் அனைவருக்கும் என்னைப் பற்றி தெரிகிறது. இதுவரை நான் வந்தது மகிழ்ச்சிதான்.
முகென் : எப்போது வெளியில் போவோம் என்று தோன்றியது. ஆனால், இப்போது ஏன் போக வேண்டும். நான் யார் என்று என்னை எனக்கு காட்டியது இந்த வீடு. எது தப்பு, சரி என்று எனக்கு இந்த வீடு கற்றுக் கொடுத்தது. என்னை அந்நியனாகவே பார்ப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால், அதற்கு இடம் கொடுக்கவில்லை. நண்பனாக, சகோதரனாகவே பலரும் பார்த்தார்கள். கட்டிலை உடைத்த சம்பவம் வருத்தப்படக்கூடிய ஒன்று என்றார். எனக்கு ஆரம்பகட்டத்தில் உதவி செய்த மலேசியா மக்களுக்கு நன்றி. என்னை அரவணைத்து ஆதரவு கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. இதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை என்றார்.
ஷெரின் : வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. என்னுடைய பொறுமையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்போது இருக்கும் ஷெரினுடன் மறுபடியும், இந்த வீட்டில் ஒரு போட்டியாளராக தொடங்க இருக்கிறேன். சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த எனக்கு, உங்களது கைதட்டல்கள் எனக்கு மியூசிக் மாதிரி இருந்தது. ஆனால், அதையெல்லாம் எப்படி இழந்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது. உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றார்.
கமல்ஹாசன் : அய்யோ 105 நாட்கள் முடிந்துவிட்டால் இன்னும் 200 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை வேண்டாம். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடுவோம் என்றார் கமல் ஹாசன்.
பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முகென் சத்தியமா என்ற பாடலை பாடி அசத்தினார்.