Advertisment

தண்ணீர் பிரச்னை, மது ஒழிப்பை பொம்மலாட்டத்தின் மூலம் பேசிய பிக் பாஸ் 3!

Bigg Boss Tamil 3, Episode 65 Written Update: அப்பா மகள் உறவையும் தாண்டி லாஸ்லியா போராடினால் தான், அவர் வெற்றி பெறுவார். அவருக்காக நான் உதவி செய்ய முடியாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 65, 27.08.19

பிக்பாஸ் தமிழ் 3

Bigg Boss Tamil 3 Episode 65: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்,ஜெயிப்பதற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது என லாஸ்லியா பேசுவதில் 65-ம் நாள் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து சேரன் பேசினார். உண்மையிலேயே அத்தனை போட்டியாளர்களில் சேரன் கூறிய காரணங்களும், விதமும் ரசிக்கும்படி இருந்தன.

Advertisment

இனிமே தான பாக்க போறீங்க இந்த கவினோட ஆட்டத்த! கமல் கொடுத்த அட்வைஸ் ஒர்க் அவுட் ஆகுதோ…

விட்டுக் கொடுக்கும் பண்பு, சகிப்புத் தன்மை, பிரச்னைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றின் மூலம் தனக்கு பிக் பாஸ் 3 டைட்டிலை ஜெயிப்பதற்கான தகுதி இருக்கிறது என்று குறிப்பிட்ட சேரன், ஏனென்றால் குடும்பத்திற்கு தலைவனாகவும், வேலைகளை செய்யும் போது மனிதனாகவும் தனது கடமைகளை சரியாக செய்து வருகிறேன், என்றார்.

தொடர்ந்த அவர், ”ஒவ்வொருவரின் குணமும், அனுபவமும் மாறுபடும். அதற்கேற்ப தான் அவர்கள் நடந்து கொள்வார்கள். மீரா மிதுன் விஷயத்தில் அவரது காலில் விழுந்து சொன்னாலும் அதில் எந்த பயனும் இருந்திருக்காது. அதே போல தான் சரவணன் விஷயத்திலும். அதனால் தான் இவர்களது விஷயத்தில் நான் பேசவில்லை. பேசினாலும் எந்த பலனும், பயனும் இல்லை.

நான் ஒரு இயக்குநர் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. கவின், சாண்டி, சரவணன் ஆகிய 3 பேரிடம் நான் அன்பை மட்டுமே தான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை. சிரிக்கக் கூட காசு கேட்பது போன்று இருந்தார்கள்.

எனக்கு யாரிடமும் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. லாஸ்லியாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது அன்பால் மட்டும் செய்ததே தவிர, அவர்களுடன் இணைந்து தான் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. அப்பா மகள் உறவையும் தாண்டி லாஸ்லியா போராடினால் தான், அவர் வெற்றி பெறுவார். அவருக்காக நான் உதவி செய்ய முடியாது” என்றார்.

பின்னர் பேசிய வனிதா, ”எல்லாவற்றையும் எதிர்த்து என்னால் ஜெயிக்க முடியும் என்கிற தில்லும், தைரியமும் எனக்கு இருக்கிறது” என்றதும், ”எப்போதாவது தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா?” என்று கவின் கேட்க, ”அப்படி கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. உள்ளே இருக்கும் போது சரி, வெளியில் இருக்கும் போது அதற்கான வாய்ப்பு வரவில்லை. சாரி என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார். அனைத்து போட்டியாளர்களிடமும் சரியாக விவாதம் செய்ததற்காக, அடுத்த வார தலைவர் போட்டிக்கு நேரடியாக நாமினேட் ஆனால் வனிதா.

பின்னர் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக மாறியது. இதில், சாண்டி, முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் ஒரு கிராமமாகவும், கவின், சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு கிராமமாகவும் பிரிந்தனர். நடை, உடை, பாஷை, வீட்டின் தோற்றம் உட்பட அனைத்துமே கிராமத்தை பிரதிபலித்தது. பின்னர் மறந்து போன பாரம்பரிய கலைகளை நினைவுகூறும் வகையில், பொம்மலாட்ட கலைஞர் காளீஸ்வரன் போட்டியாளர்களுக்கு பொம்மலாட்டத்தை கற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம், தண்ணீர் பிரச்சனை, மது ஒழிப்பு, கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் குறித்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை சரியாக செய்து முடித்த முகென், வனிதா, சாண்டி, லாஸ்லியாவிற்கு ஸ்டார் கொடுக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாப்பாடு வழங்கப்பட்டது. பின்னர் அதை அவர்கள் நிலாச்சோறாக சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

 

Kamal Haasan Bigg Boss Tamil Bigg Boss Cheran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment