Advertisment

பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்? டாஸ்க்கில் ஏற்பட்ட ட்விஸ்ட்!

Bigg Boss Tamil 3, Episode 87 Written Update: சேரனை நோஸ்கட் செய்வதாக நினைத்த கவின், ‘இப்போ அடிச்சுக்குவோம், அப்புறம் சேந்துக்குவோம்’ என்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 87, 18.09.19,

Bigg Boss Tamil 3 day 87, 18.09.19,

Bigg Boss Tamil 3 Episode 87: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 87-ம் நாள் கொஞ்சம் சலிப்புடன் ஆரம்பித்து, போகப்போக சுவாரஸ்யமாக அமைந்தது. கதை சொல்லிவிட்டு, முந்தைய நாள் பாடிய அதே பாடலை சாண்டி பாடிக் கொண்டிருந்தார்.

Advertisment

பிக் பாஸ்: முதன்முறையாக கவினை பாராட்டிய சேரன்

அதே போல் முந்தைய நாள் கோரிக்கை வைத்த படி, மீண்டும் பிக் பாஸிடம் சென்றும் தன்னை பாசமாக அழைக்குமாறு முகென் கேட்டுக் கொண்டார். பின்னர் முகெனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிக்பாஸ், பாசமாக அழைத்து ‘தெர்மாகோல்’ டாஸ்க் செய்ய சொன்னார். ப்ரோமோவில் கவின் மீது தப்பு இருப்பதாக தோன்றினாலும், நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, அவர் மீது எந்த தப்பும் இல்லை என்றே தோன்றியது. காரணம், எல்லாருமே, பையை ஓட்டைப் போடுவது, பையை பிடித்து இழுப்பது என அனைத்தையுமே செய்தார்கள். தர்ஷனுக்கு முன்னாடி நின்றுக் கொண்டிருந்த ஷெரின் வேகமாக ஓடாததால், அது தர்ஷனுக்கு பிரச்னையாக அமைந்து, கவினிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தன்னால் முடியவில்லை என சேரன் விட்டுவிட்டார்.

”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா?” – கோபமான ஷெரின்

பின்னர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அனைவரும் தொடர்ந்து சொல்லி, சொல்லி நாம் தான் டைட்டில் வின் பண்ணுவோம் என்ற மனநிலைக்கு தர்ஷன் வந்துவிட்டதாக தெரிகிறது. டாஸ்க் என்றால் நம்ம தான் நல்லா பண்ணுவோம் என்ற மனநிலையில் இருக்கும் அவருக்கு, தெர்மா கோல் டாஸ்க்கில் இருந்ந்து வெளியில் வந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு உடன் இருப்பவர்களும், தர்ஷனை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோபத்தில் தர்ஷன் கத்திக் கொண்டிருக்கையில், ‘சரி டாஸ்க் தான் முடிஞ்சிடுச்சே விடு’ என தர்ஷனை ஆறுதல் படுத்த முயல்கிறார். சேரனை நோஸ்கட் செய்வதாக நினைத்த கவின், ‘இப்போ அடிச்சுக்குவோம், அப்புறம் சேந்துக்குவோம்’ என்கிறார். அதற்கு சேரனும் சரி சரி என்று அமைதியாகி விடுகிறார். லாஸ்லியாவுக்கும் சேரனுக்கும் இடையேயான அப்பா மகள் உறவு மழுங்கி விட்டதாக தெரிகிறது. சுத்தமாக சேரனை சட்டை செய்வதில்லை லாஸ்லியா. அதனால் அவரும் விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.

அடுத்ததாக பாக்ஸ் அடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் சேரன் முதலிடம் பிடித்தார். இப்போது வரை கொடுத்த டாஸ்க்குகளில் முகென் முதலிடத்தில் இருக்கிறார். இன்னும் கொடுக்கப்படும் டாஸ்க்குகளிலும், இதே போன்று முகென் சிறப்பாக விளையாடினால், ‘டிக்கெட் ஃபினாலே’ வாய்ப்பு அவருக்குத் தான்!

 

 

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment