Advertisment

சாப்பாடு பரிமாறுவதில் வெடித்த சண்டை: பிக் பாஸ் ப்ரோமோ

“யார் யாரு எங்க என்னென்ன பேசுறீங்கன்னு ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி, நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன்”

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 Promo

Bigg Boss 4 Tamil Bala, Archana, Rio

Bigg Boss Tamil 4 Promo : பலதரப்பட்ட உணர்வுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இதில் பதினாறு பேர் போட்டியாளர்களாக உள்ளனர். தினமும் இந்நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

Advertisment

 

ப்ரோமோவில், ”பிக் பாஸ் வொர்ஸ்ட் பெர்ஃபார்மென்ஸ்ல என்னையும் அனிதாவையும் செலக்ட் பண்ணிருக்காரு. தேவையில்லாம குரூப்பிஸம்ன்னு இருக்கக் கூடாதுன்னு தான் நம்ம எல்லாருமே நினைக்கிறோம். ஆனா அதையும் மீறியே ஒரு சில இடத்துல பண்றோம். அத நான் ஸ்ட்ரைட் ஃபார்வார்டாவே சொல்றேன்” என்கிறார் ஆரி.

ஃப்ளிப்கார்ட் தீபாவளி ஆஃபர் தொடங்கியது: மொபைல், லேப்டாப் 50% வரை தள்ளுபடி

மேலும் தொடரும் அவர், “யார் யாரு எங்க என்னென்ன பேசுறீங்கன்னு ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி, நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன்” என்கிறார். இதனால் ரியோ, அர்ச்சனா முகத்தில் ஒருவித கலக்கம் தெரிகிறது.

அடுத்த ப்ரோமோவில், ”சாப்பாடு வச்சிட்டு இருக்கும் போது, அதுல குறை இருந்தா நீங்க சொல்லலாம். நீங்க வைங்க நான் வந்து வைக்கிறேன்னு நீங்க சொல்லக் கூடாது” என அர்ச்சனாவிடம் கூறுகிறார் ஆரி. ”இவ்ளோ தான் சாப்பிடுவியா இதுக்கு மேலயும் சாப்பிடுவியான்னு நீங்க ஆஜித் கிட்ட கேட்டது எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு" என்கிறார் அர்ச்சனா. இது குறித்து இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment