Advertisment

’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி

‘அவங்க சிரிச்சிக்கிட்டே நிறைய நெகட்டிவ் விஷயங்கள பண்றாங்க’ என ரம்யா நாமினேட் செய்யப்படுகிறார்.

author-image
WebDesk
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Shivani Aajeeth review Day 57

Bigg Boss Tamil 4 Bala Shivani

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். தனது மகனை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகக் கூறிய அவர், வெளியில் சென்று அவனைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

Advertisment

இந்நிலையில் திங்கட்கிழமை தோறும் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்றைய ப்ரோமோவில், சனத்தை நாமினேட் செய்கிறார் அர்ச்சனா. அதன் பிறகு பாலாஜி, ரம்யா உள்ளிட்டோர் ஆரியை நாமினேட் செய்கிறார்கள். ரியோ, நிஷா, ரமேஷ் உள்ளிட்டவர்கள் ரம்யாவை நாமினேட் செய்கிறார்கள். ‘அவங்க சிரிச்சிக்கிட்டே நிறைய நெகட்டிவ் விஷயங்கள பண்றாங்க’ என்கிறார் ரமேஷ். பாலாஜியின் நிழலிலேயே ஷிவானி இருப்பதாக தோன்றுவதாக, அவரையும் அர்ச்சனா நாமினேட் செய்கிறார். கேபி, ஆஜித், ஆரி உள்ளிட்டோரும் ஷிவானியை நாமினேட் செய்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷன் லிஸ்ட்டை வாசிக்கிறார் பிக் பாஸ். ’Baggage வெச்சிட்டு எல்லாரையும் தப்பா புரிஞ்சிக்கிறாரு, ஹவுஸோட அமைதியை கெடுக்குறாங்க, பாலாவோட நிழல்ல தான் இருக்காங்க, போன்ற காரணங்கள் தான் இந்த வார நாமினேஷனில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன’ என்கிறார் பிக் பாஸ். இதனைக் கேட்ட பாலாவும் ஷிவானியும் டென்ஷன் ஆகிறார்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment