Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பாட்டி சொல்லை தட்டாதே என்ற ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போது பாட்டி அர்ச்சனாவை மகிழ்ச்சியாக்க, அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு பல விஷயங்களை செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளிலேயே பத்திரத்தை சோம் சேகர் திருடினார். ரம்யா பாண்டியன், கேப்ரியலா மற்றும் சோம் சேகர் ஆகியோர் தான் அதை திருட வேண்டுமென ரகசிய டாஸ்க் வழங்கினார் பிக் பாஸ்.
சூரரைப் போற்று: சூர்யா ரசிகர்களுக்கு அட்டகாசமான தீபாவளி ட்ரீட்!
இன்றைய ப்ரோமோவில், “பாலாஜி நீங்க சரியா விளையாடல. பாட்டிய எல்லாரும் சந்தோஷமா வச்சிருக்கனும். அதனால இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்ல உங்களுக்கு 0 புள்ளிகள்” என அறிவித்தார் பிக் பாஸ்.
மற்றொரு ப்ரோமோவில், “அனைத்து போட்டியாளர்கள் முன்பும் திருடர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் பிக் பாஸ். இதையடுத்து சோம், ரம்யா பாண்டியன், கேப்ரியல்லா எழுந்தார்கள். பின்னர் அந்தப் பத்திரத்தை எப்படி திருடினார்கள் என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. அதோடு அங்கிருந்த திரையில் திருடிய காட்சிகளும் ஒளிபரப்பப் பட்டன. பின்னர் பத்திரத்தை லாவகமாக திருடினாலும், அதை தொலைத்ததற்காக போட்டியாளர்களிடம் அடி வாங்கினார் சோம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”