ரெண்டே நாளில் ஓவர் ஆக்டிங் எனப் பெயர் வாங்கிய அர்ச்சனா…

‘சிம்ப்ளி வேஸ்ட்’, ‘நமத்துப் போன பட்டாசு’ போன்ற விபரீதமான பட்டங்களை அர்ச்சனாவை வைத்து, போட்டியாளர்களுக்குக் கொடுக்க செய்தார் பிக் பாஸ்.

By: October 17, 2020, 12:57:29 PM

Bigg Boss Tamil 4: விஜய் டிவி-யில் கடந்த 4-ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பதினாறு போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் 17-வது போட்டியாளராக வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

சென்னை மக்களுக்கு செம்ம வீக் எண்ட்: திங்கட்கிழமை வரை மழை இருக்கு!

அப்போது ‘சிம்ப்ளி வேஸ்ட்’, ‘நமத்துப் போன பட்டாசு’ போன்ற விபரீதமான பட்டங்களை அர்ச்சனாவை வைத்து, போட்டியாளர்களுக்குக் கொடுக்க செய்தார் பிக் பாஸ். அப்படி கொடுக்கும் போது, இது எனக்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், மற்றபடி எனக்கும் இந்த பட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என அர்ச்சனா கூறுவார் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் அர்ச்சனா அப்படி எல்லாம் கூறாமல், தானே அந்த விருதுகளை தருவது போல, எக்ஸ்பிரஷன்களைக் கொடுத்தார்.

Tamil News Today Live: திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மரணம்

அர்ச்சனாவின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்த ரசிகர்கள், ’குடுத்த காசுக்கு மேல அர்ச்சனா நடிக்கிறார்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  ”ஏற்கனவே பிக் பாஸில் இருப்பவர்கள் எல்லாம் ஒவ்வொரு விதத்தில் எரிச்சல் படுத்துகிறார்கள், இதில் அர்ச்சனா வேற” என்ற ரீதியில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 4 vj archana gets over acting image from nettizens

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X