scorecardresearch

Bigg Boss Tamil: மேலும் ஒரு எலிமினேஷன்… இவங்க 5 பேரில் ஒருவர்!

Bigg Boss Tamil 5 Elimination Kamal Hassan Nadiya Chang Tamil news இந்த ஐவரில் ஒருவர் வெளியேறப்போகிறீர்கள். பக்கு பக்குனு அடிச்சுக்குதுல. எனக்கும் அப்படிதான்.

Bigg Boss Tamil 5 Elimination Kamal Hassan Nadiya Chang Tamil news
Bigg Boss Tamil 5 Elimination Kamal Hassan Nadiya Chang Tamil news

Bigg Boss Tamil 5 Elimination Kamal Hassan Nadiya Chang Tamil news : தொடக்கத்தில், யாரும் அவ்வளவாகப் பரீட்சையம் இல்லாத முகங்களாக இருக்கிறார்களே, இந்த சீசன் பிக் பாஸ் சுவாரசியமாக நகருமா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்தன. ஆனால், போகப்போக வேற லெவல் ஷோவாக இருக்கும்போலவே என்றே யோசிக்க வைக்கிறது. யாரை ஏற்றியும் அவ்வளவாகத் தெரியாமல் இருந்தபோதிலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலை அதிகம் தூண்டுகிறது.

பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பித்து இரண்டு வாரங்கள்தான் ஆகிறது, ஆனால் அதற்குள் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளராகக் களமிறங்கிய நமீதா தவிர்க்க முடியாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்தான் இம்முறை டைட்டில் வின்னர் என்று பலரும் நம்பிக்கை வைத்திருக்க திடீரென்று ஏன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பதற்கான காரணம்கூட இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில், தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், பாவனி மற்றும் தாமரையைத் தவிர்த்து மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். அவர்களில் சிலர் நேற்றைய எபிசோடில் காப்பாற்றப்பட, நடியா சங், அபிஷேக், சின்னப்பொண்ணு, வருண் மற்றும் மதுமிதா ஆகிய ஐந்து மட்டும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

இவர்கள் ஐந்து பேரில் ஒருவர்தான் வீட்டைவிட்டு இன்று வெளியேற்றப்படப்போகிறார். இது சம்பந்தமான முதல் ப்ரோமோவும் வெளியாகி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த ப்ரோமோவில், இந்த ஐவரில் ஒருவர் வெளியேறப்போகிறீர்கள். பக்கு பக்குனு அடிச்சுக்குதுல. எனக்கும் அப்படிதான். நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கிறேன் ‘ என்று கூறியபடி எலிமினேட் ஆகப் போகும் அந்த நபருடைய பெயர் அச்சடிக்கப்பட்டிருக்கும் கார்டை எடுத்தபடி காட்சி முடிவடைகின்றன.

இந்நிலையில், இரண்டு வாரங்கள் ஆனபோதிலும், இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நடியா சங்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன. உண்மையில் நடியாதான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா என்பது இன்றைய எபிசோட் பார்த்தால்தான் தெரியும்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 5 elimination kamal hassan nadiya chang tamil news