‘கணவர் இறந்தப்போ அழுகை வரல; கோபம்தான் வந்தது!’ மனம் திறந்த பிக் பாஸ் பாவனி ரெட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி, “எனது கணவர் இறந்தப்போ எனக்கு அழுகை வரலை, உண்மையில் எனக்கு அவர் மேல கோபம் வந்துடுச்சு.” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Bigg Boss Tamil 5, Bigg Boss 5, Pavani Reddy open talk, Pavani Reddy open talk about her husband suicide, பிக் பாஸ், பிக் பாஸ் 5, பாவனி ரெட்டி, பாவனி ரெட்டி கணவர் இறந்தப்போ அழுகை வரல கோபம்தான் வந்தது, Pavani Reddy husband suicide, pavani reddy no tears buy more angry while her husband suicides, bigg boss, pavani reddy

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை பாவனி ரெட்டி, “எனது கணவர் இறந்தப்போ எனக்கு அழுகை வரல, ஆனால், கோபம் வந்தது” என்று மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் அக்டோபர் 3ம் தேதி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து சமூக ஊடகங்களில் ரசிகர்களும் நெட்டிசன்களும் நிகழ்ச்சி பற்றி விவாதித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாவனி ரெட்டி, ஆரம்பம் முதலே ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மற்ற போட்டியாளர்கள், மதுமிதா, இமான் அண்ணாச்சி, நமீதா ஆகியோர் தங்களின் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்கள் வாழ்க்கையில் பட்ட துயரங்களை பகிர்ந்துகொண்டனர். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்கும் ரசிகர்கள் பலரும் கண்ணீர் வடித்து வருகின்றனர். இதனால், பிக் பாஸை கிண்டல் செய்யும் விதமாக பெருசு இதோட உன் சோக கதையை நிறுத்திக்கோ என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், பிக் பாஸ் சீசன் 5ல் கவனம் பெற்றுள்ள பாவனி ரெட்டி, “எனது கணவர் இறந்தப்போ எனக்கு அழுகை வரலை, கோபம்தான் வந்தது” என்று மனம் திறந்து தனது சோகக் கதையைக் கூறியுள்ளார்.

பாவனி ரெட்டி தனது 21வது வயதில் மாடல் அழகியாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு ‘லாகின்’ படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள், ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவிலும் நடித்தார்.

சினிமாவை அடுத்து பாவனி ரெட்டி தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி சீரியல்களிலும் சன் டிவியில் பாசமலர், ராசாத்தி நடித்தார்.

இந்த சூழலில்தான், பாவனி ரெட்டி 2016ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிப்பு மற்றும் குடும்பம் என அமைதியாக சென்று கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் திடீரென ஒரு பெரும் புயல் வீசி உடைத்துப்போட்டது. 2017ம் ஆண்டு குடும்ப சண்டையில் பிரதீப் குமார் தனது மனைவியின் சேலையை பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.

பாவனி ரெட்டி தனது வாழ்க்கையில் நடந்த பெரும் சோக நிகழ்வில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில்தான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி, “எனது கணவர் இறந்தப்போ எனக்கு அழுகை வரலை, உண்மையில் எனக்கு அவர் மேல கோபம் வந்துடுச்சு. அவ்வளவு ட்ரீம்ஸ் பார்த்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். நீ நடுவில விட்டுட்டு போய்ட்ட, இதுதான் கோபம் அவங்க மேல. உண்மையில் நான் அவங்களை ரொம்ப லவ் பண்ணியிருக்கேன். உண்மையில் சொல்லணும்னா என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாங்க, எனக்கு வாழ்க்கையில தனியாவே இருக்கணும்ணு எழுதியிருக்கோ…” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

இதைக் கேட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மற்ற போட்டியாளர்களும் கண்ணீருடன் அவர் கதையைக் கேட்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அதே போல, பாவனி ரெட்டி மனம் திறந்து பேசும் பிக் பாஸ் புரமோவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், பாவனியோட கணவர் தற்கொலை பண்ண விஷயம் தெரியும். அதுக்கு நிறைய பேரு நிறைய காரணங்கள் சொல்லலாம். அதோட உண்மையான வலி அதை உணரந்தவங்களுக்கு தான் தெரியும்.. சோ அவங்களோட பழைய வாழ்க்கை பத்தி யாரும் விமர்சிக்காம இருக்குறது நல்லது.. இங்க எப்படி இருக்காங்க அத மட்டும் பாருங்க.. என்று கம்மெண்ட் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 pavani reddy open talk about tragedy incident that her husband suicide

Next Story
விஜய் டிவி சீரியல் நடிகை… சூப்பரான டப்பிங் ஆர்டிஸ்ட்… ஹீரோவுக்கே வாய்ஸ் கொடுத்த கதை தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com