Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கும் முதல் நாள் நேற்று தொடங்கியது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே துண்டை காணும் துணியை காணும் எனப் போட்டியாளர்களை கதறவிட்டார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் முதல் சவாலாக 16 போட்டியாளர்களில் 4 பேரின் லக்கேஜ்கள் மட்டும் வீட்டிற்குள் அனுப்பப்படாது என அறிவித்தார். அதில், டேனியல், சென்ராயன், ஐஸ்வர்யா மற்றும் ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டார். இதனை டாஸ்க் என்று கூறலாம், சோதனை என்றும் கூறலாம். பிக் பாஸ் 2 குடும்பத்தின் ஒற்றுமையை சரி பார்க்கும் சோதனையில் சாதனைப் படைத்த இவர்கள், தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் தொடங்கினர்.
Bigg Boss Tamil 2 Team Leader Task: பிக் பாஸ் தமிழ் 2 தலைவர் போட்டி
Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் வீட்டில் கண்டிப்பாக இருக்கும் மும்தாஜ்...
பிக் பாஸ் 2 பெட் ரூமிற்குள் 3 என்வெலப்கள் வைக்கப்பட்டிருக்கும், அவற்றைத் தேர்வு செய்பவர்கள் வீட்டின் தலைவராக தகுதியானவர்கள் என பிக் பாஸ் அறிவித்தார். பிக் பாஸ் கொடுத்த ஆலார்ம் சத்தத்தின் பிறகு வேகமாக அனைவரும் செயல்பட்டனர். முதலில் போட்டியாளர்கள் தங்களின் படுக்கையை சோதனை செய்தனர். பின்னர் அடுத்தவர்களின் படுக்கையை சோதனை செய்தனர். இங்கு தான் மும்தாஜ் செம்மையாய் கடுப்பானார்.
Bigg Boss Tamil 2 Mumtaz Angry: பிக் பாஸ் தமிழ் 2ல் கோவமடைந்த மும்தாஜ்
பிக் பாஸ் 2 பெண்கள் அறைக்குள் நுழைந்த சென்ராயன், என்வெலப்களை தேடத் தொடங்க, உடனே கோவப்பட்டார் மும்தாஜ். ‘பாய்ஸ் யாரும் கர்ல்ஸ் துணியில் கை வைக்க வேண்டாம்.’ எனச் சத்தம் போட்டார். பதிலுக்கு சென்ராயன், ‘பின்ன எப்படி தேடுறது’ எனக் கேள்வி எழுப்ப, ‘தொடக்கூடாதுனா தொடக் கூடாது’ என அதிகாரமாகவும் திட்டவட்டமாகவும் மும்தாஜ் கூறிவிட்டார்.
Bigg Boss Tamil 2 Senrayan : பிக் பாஸ் தமிழ் 2 டாஸ்கில் சென்ராயன் மன வருத்தம்
பின்பு தலைவர் போட்டியில் மும்தாஜ் தோல்வியுற்றதும், சமையல் டீம்மின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதும் நாம் அனைவரும் பார்த்தது தான். ஆனால் வீட்டின் உள்ளே என்ன நடந்துதோ ஏது நடந்ததோ... மும்தாஜ் மீது கடுமையாக கோபமும் பொறாமையும் வைத்திருந்த பிற போட்டியாளர்கள் அவரை எவிக்ஷனுக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.
சூழ்ச்சிகளைக் கடந்து வருவாரா மும்தாஜ்?