பிக் பாஸ் போட்டியாளர் பாவனி ரெட்டி வாழ்க்கையில் நடந்த பெரும் சோகம்!

ரசிகர்கள் பலரும் பாவனி ரெட்டியின் வாழ்க்கையில் இப்படி ஒரு பெரும் சோகமா என்று உச் கொட்டி சமூக ஊடகங்களில் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Bigg Boss tamil season 5, Bigg Boss season 5 contestant Pavani Reddy, Pavani Reddy says great tragedy of her life, Pavani Reddy husband death, Pavani Reddy reveals her husband death, Gana singer Isaivani, பிக் பாஸ் போட்டியாளர் பாவனி ரெட்டி, பாவனி ரெட்டி வாழ்க்கையில் நடந்த பெரும் சோகம், பிக் பாஸ் சீசன் 5, இசைவாணி, Isaivani, Bigg boss tamil, bigg boss season 5, Pavani Reddy, Isaivani

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாவனி ரெட்டி தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பலரும் புதுமுகங்கள்தான். அதனால், புதுமுகங்களிடம் இருந்து கேட்பதற்கு பல புதிய கதைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது முகங்களின் கதைகள் அவர்களைப் பற்றிய சுவாரஸியமான விஷயங்கள் இந்த சீசனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் 2வது நாள் வீட்டில் நடந்த நிகழ்வுகளை புரமோ வெளியிடப்பட்டு வருகிறது. இந்த புரமோக்கள் ஒவ்வொரு நாளூம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்டுகிறது. அதே போல, இன்றைய 3வது நாள் புரமோவில் பாவனி ரெட்டி தனது கணவர் இறந்து விட்டார் மிகப் பெரிய சோகத்தை மற்றொரு போட்டியாளர் இசைவாணியிடம் கூறுகிறார்.

பாவனி ரெட்டி 21 வயதில் மாடல் அழகியாக அறிமுகமானவர். கடந்த 2012ம் ஆண்டு ‘லாகின்’ எனும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள், ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். பாவனி ரெட்டி தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடித்தார்.

இதையடுத்து, பாவனி ரெட்டி தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் தமிழ் டிவி சீரியல்களில் நடிக்க வந்தார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாவனி ரெட்டி, சன் டிவியில், பாசமலர், ராசாத்தி, விஜய் டிவியில் சின்னத்தம்பி, உள்ளிட்ட சீரியல்களிள் நடித்துள்ளார்.

இந்த சூழலில்தான், பாவனி ரெட்டி 2016ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிப்பு மற்றும் குடும்பம் என அமைதியாக சென்று கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் திடீரென ஒரு பெரும் புயல் வீசி உடைத்துப்போட்டது. 2017ம் ஆண்டு இவர்களின் குடும்ப வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட சண்டையால், பாவனி ரெட்டியுடன் சண்டைபோட்ட பிரதீப் குமார் தனது மனைவியின் சேலையை பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.

பிக் பாஸ் வீட்டில், இசைவாணி பாவனி ரெட்டியிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என கேட்க, அவர் தனது கணவர் இறந்து விட்டார் என்கிற சோக கதையைக் கூறி இசைவாணியை மட்டுமல்ல ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டார். ரசிகர்கள் பலரும் பாவனி ரெட்டியின் வாழ்க்கையில் இப்படி ஒரு பெரும் சோகமா என்று உச் கொட்டி சமூக ஊடகங்களில் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil season 5 contestant pavani reddy says great tragedy of her life at isaivani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com