மீண்டும் வருகிறது பிக் பாஸ்... ப்ரோமோ ஷூட்டிங் நிறைவு!!!

மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டு தமிழ்நாட்டின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த ஷோவாக பிக் பாஸ் அமைந்தது. கடந்த ஆண்டு இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டது.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும் இந்தப் போட்டியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 100 நாட்கள் ஒரு பங்களாவில் 24 மணி நேரமும் கேமரா சூழ்ந்திருக்க, போட்டியாளர்கள் தங்க வேண்டும். அந்த வீட்டில் இருக்கும் வரை வெளியே இருப்பவர்களுடன் போட்டியாளர்களின் தொடர்பு துண்டிக்கப்படும். இவ்வாறு 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் பிக் பாஸ் பட்டத்தை ஒருவரே நேர்மையாக வென்றெடுப்பார். இவ்வாறு கடந்த முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் தான். இந்த நிகழ்ச்சியினால் போட்டியாளர்கள் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர்.

இவ்வாறு மக்கள் ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறது விஜய் டிவி. எப்போது பிக் பாஸ் 2 வரும், அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் என்ற எண்ணத்திற்குக் கூடுதல் அசை போட்டுள்ளது தற்போது வெளியாகியிருக்கும் தகவல்.
பிக் பாஸ் 2-க்கான பிரோமோ ஷூட்டிங் மே 3ம் தேதி நடைபெற்றது. இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவதால் அவரைக் கொண்டே இந்த பிரோமோ உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் இந்த ஷூட்டிங் நடந்திருப்பதால், பிக் பாஸ் பங்களாவும் அங்கேயே அமைக்கப்பட்டிருக்குமா என்று மக்களிடையே யோசனை வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக இதுவரை 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னதான் கமல் இதனைத் தொகுத்து வழங்குவார் என்று அந்த நிறுவனம் உறுதி செய்திருந்தாலும், போட்டியாளர்களின் பட்டியலை ரகசியமாகவே காத்து வருகிறது.

×Close
×Close