பிக்பாஸ் வீட்டில் நுழையும் புதிய பெண் போட்டியாளர் இவர் தானா?

பிக்பாஸ் ஷோ முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது, 14 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு பிரீமியர் லீக், புரோ கபடி லீக் என எவ்வளவு தான் போட்டிக்கு வந்தாலும், டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப்பில் இருப்பது “பிக்பாஸ்” தான். போன வாரம் வரை ஓவியாவை வைத்தே ஷோவை ஒட்டினார்கள். ஆனால், இந்த வாரம் பெரிதாக எந்தவித பரபரப்பான சம்பவமும் நடக்கவில்லை. அதேசமயம், ஓவியாவை நெகட்டிவாக காட்டும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், நேற்று நடந்த பிக்பாஸ் ஷோவின் இறுதியில் ஒளிபரப்பான புரமோவில், புதிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் இல்லத்தில் நுழையவிருப்பதாக காட்டப்பட்டது.

அந்த புரோமோவில் ஒரு நடிகை பல்லக்கில் இருந்து இறங்குவது போன்றும், அவர் இறங்கும் போது, கிருஷ்ணா நடித்த “கழுகு” படத்தின் பாடலான “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்  அவசரம்” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது அந்த 16வது போட்டியாளர் பிந்து மாதவி தான் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்பது இன்றைய பிக்பாஸ் எபிசோடில் தெரிந்துவிடும். பிக்பாஸ் ஷோ முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது, 14 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. பின், நமீதாவை 15-வது நபராக களமிறக்கியது பிக்பாஸ்.

ஆனால், நமீதாவோ ஓவியா புயலில் சிக்கி, மக்களால் கடந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண் போட்டியாளரை 16-வது நபராக பிக்பாஸ் அறிமுகம் செய்திருக்கிறது.

அதேசமயம், பாலிவுட்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது , இதுபோன்ற சில நடிகைகள் வந்து குத்தாட்டம் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இவர்கள் அங்கு தங்க மாட்டார்கள். எனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அந்த நடிகை டான்ஸ் ஆடிவிட்டு, மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிவிட்டு சென்றுவிடலாம் என்கின்றனர் சிலர்.

எது எப்படியோ… இன்று இரவு நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவையனைத்திற்கும் பதில் கிடைத்துவிடும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close