இவங்க எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரப்போறாங்க – அதகளம் தான்

Biggboss Season 4 : கொரோனா காரணமாக, வீடுகளில் முடங்கியிருந்த நமக்கு, இந்த பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி டபுள் தமாக்காவாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை

By: September 4, 2020, 10:17:44 AM

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த 4 பெண் நட்சத்திரங்களும் கலந்துகொள்ளப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், முந்தைய சீசன்களை விட இந்த சீசனில், செம களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவி என்றாலே சீரியல்கள் தான் என்று இருந்த நிலையை மாற்றியமைத்த பெருமை விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியையே சேரும். மனிதர்களின் பல்சை புரிந்த விஜய் டிவி, அந்நிகழ்ச்சி பார்ப்பவர்களையும், பிக்பாஸ் கன்டெஸ்ட்களாகவே உணர வைத்தது, அந்தளவிற்கு மக்களின் சைக்காலஜியை அந்நிகழ்ச்சி பிரதிபலித்தது.

இந்நிகழ்ச்சி தமிழிலும் பிரபலம் அடைந்ததற்கு உலகநாயகன் கமல்ஹாசனின் பங்களிப்பும் மிக முக்கியது ஆகும். முதல் 3 சீசன்கள் பெற்ற வெற்றியை தொடர்ந்து, 4வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் 4 சீசன் புரோமா, சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் இவர்கள்தான் என்று எல்லா ஊடகங்களிலும் புதுப்புதுத்தகவல் தொடர்ந்து வெளியாகி வந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், இந்த 4 செலிபிரிட்டிகள் பங்கேற்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இலக்கியா மேனன்

லக்கி இலக்கியா என்று சமூகவலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கும் இவரது டிக்டாக் வீடியோக்கள், இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது (தற்போது டிக்டாக்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது). இவரின் கவர்ச்சி வீடியோக்கள் குறித்து பல்வேறு எதிர்கருத்துகள் இருந்தபோதிலும், டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முன்னணி பிரபலமாகவே இருந்து வந்துள்ளார். தற்போது திரைப்படம் ஒன்றிலும் இவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவரின் பிக்பாஸ் வரவு, இளைய தலைமுறையினரை, நிகழ்ச்சிக்கு கவர்ந்திழுப்பாகவே அமையும்.

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர் ஷிவானி. பிக்பாஸ் சீசன் 2வில் ஓவியா, சீசன் 3ல் லோஸ்லியா உள்ளிட்டோர் விட்டுச்சென்ற இடத்தை இவர் இந்த 4வது சீசனில் நிச்சயம் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களுக்காகவே பலர் தினமும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு, சமூகவலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையே இவர் உருவாக்கி வைத்துள்ளார்.

பூனம் பாஜ்வா

முந்தைய சீசன்களில் நமீதா, மும்தாஜ் போன்ற முன்னாள் நடிகைகள் அலங்கரித்திருந்த இடத்தை பூனம் பாஜ்வா நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அழகுக்கென்று ரசிகர் வட்டம் உண்டு

வி ஜே சித்ரா

மக்கள் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று தமிழில் உள்ள சேனல்களிலும் தனது கால்தடம் பதித்த ஒரே நபர் என்றால், அவர் விஜே சித்ரா தான். தற்போது, விஜய் டிவியில், பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.. சமீபத்தில், வி ஜே சித்ராவுக்கும், ஷிவானி நாராயணனுக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்றிருந்த நிலையில், அவர்களை ஒரே வீட்டில் இருக்கவைப்பதன் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை மேலும் விறுவிறுப்பாக்க நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். வனிதா இல்லாத குறையை, வி ஜே சித்ரா தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியோ, கொரோனா காரணமாக, வீடுகளில் முடங்கியிருந்த நமக்கு, இந்த பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி டபுள் தமாக்காவாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Biggboss vijay television kamal haasan biggboss season 4 contestants ilakkiya lucky ilakkiya shivani narayanan social celebrities poonam bajwa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X