bigil video : நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் பைக் சேசிங் காட்சி இணையத்தில் லீக்காகி பட்டையை கிளப்பியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில் பிகில் திரைப்படத்தை கதை என்னவாக இருக்கும் என பேச்சு அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் ஒரு பெண்களுக்கான புட்பால் போட்டி குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதும், அதில் விஜய் பயிற்சியாளராக வருகிறார் என்பதும் வந்துவிட்டது.
இந்நிலையில், பிகில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது, படத்தின் காட்சி ஒன்றிற்காக, நடிகர் விஜய், மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி, மேம்பாலத்தில் வைத்து படமாக்கப்பட்டது.
First time seeing a celebrity that too my inspiration love so on.
.. @Actor_Vijay @VijayFansTrends @avadhaar @ActorVijayFP @LMKMovieManiac... Blessed to get thalapathy tharisanam... Unforgettable day ???????????? pic.twitter.com/bgSxXaL52p
— Arivazhagan (@Arr6199) August 4, 2019
Another one ????????????????
Thalapathy Vera Level Pandraru ????????????????????????????#BIGIL #BigilDiwali #BigilPodalaama pic.twitter.com/7s5f6raZKQ
— Nᴀɴʙᴀɴ SɪᴠA™ (@itz_nanbansiva) August 4, 2019
இந்த காட்சியை பாலத்தின் கீழே நின்றுக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் பலத்த உற்சாகத்துடன் கண்டுக்களித்தனர். அங்கிருந்தவர்கள் இதை தங்களது செல்போனில் படம் பிடித்து இணையத்திலும் வெளியிட்டன. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் நேற்று மாலை முதல் வைரலாகி வருகிறது.
THALAPATHY ???? ???? ???? #BigilPodalaama #Bigil ????#BigilVerithanamFestivalSoon ???? ???? pic.twitter.com/wk9QuOQxSa
— ????Joseph Kuruvilla????CSK???? (@imkuruvilla07) August 4, 2019
#ThalapathyVijay Respects his fans from the spot of #Bigil shoot, happening now in the outer ring road of Redhills. @BigilOff. pic.twitter.com/BeSD3NeHJ5
— #BIGIL (@BigilOff) August 4, 2019
ஷூட்டிங் முடிந்தவுடன் விஜய், ரசிகர்களை பார்த்து கையசைக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.