ரூ100 கோடி வசூலை தாண்டிய பிகில்: விஜய் ரசிகர்கள் செம ஹாப்பி!

Bigil Box office collection: அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான நடிகர் விஜய்யின் பிகில் படம் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது.

Bigil Full Movie Tamil Rockers Download, bigil movie hd download tamilrockers, பிகில், தமிழ் ராக்கர்ஸ் 2018 டவுன்லோட்
BIgil Box Office Collection

Bigil Box office collection: அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான நடிகர் விஜய்யின் பிகில் படம் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பிகில் படம் விஜய் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ.180 கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட பிகில் படம் பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் 650 முதல் 700 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.1.80 கோடியும் இரண்டாவது நாளில் ரூ.1.73 கோடியும் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது. சென்னையில் நேற்று வார இறுதியில் மொத்தம் ரூ.5.26 கோடி பிகில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், விஜய்யின் பிகில் படம் வெளியான 2 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.22 கோடி வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் ஆய்வாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். கேரளாவில் ரூ.8.10 கோடியும் ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் கர்நாடகாவில் 2வது நாளில் ரூ.7.15 கோடியும் வசூலாகி உள்ளன. இதன் மூலம் பிகில் படம் இந்தியாவில் 2 நாட்களில் ரூ.22.45 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது.

மூன்றாவது நாள் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் முடிவில் ஆந்திரப் பிரதேசம் தெலங்கானாவில் ரூ.10.8 கோடி வசூல் செய்துள்ளது.

சினிமா விமர்சகர் தரன் ஆதர்ஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், அமெரிக்காவில் சனிக்கிழமை வரை பிகில் படம் ஒரு மில்லியன் டாலர் அதாவது ரூ.7.8 கோடி வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ரூ.1.59 கோடி, இங்கிலாந்தில் ரூ.2.31 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் பிகில் படம் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களில் பிகில் படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.200 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigil box office day 2 collection crossed rs 100 crore

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com