Advertisment

Bigil Full Movie in tamilrockers : தமிழ்ராக்கர்ஸில் வெளியான பிகில்... அதிர்ச்சியில் படக்குழுவினர் !

Bigil Full Movie in Tamilrockers : படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகமாக இருக்கின்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil box office collection, thalapathy vijay

பிகில் வசூல்

Bigil Full Movie in tamilrockers : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படம் வெள்ளிக்கிழமை (25.10.19) வெளியாகியது. தீபாவளி பண்டிகையொட்டி ரசிகர்களுக்கு விருது படைக்க வெளியான இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து தீபாவளி பண்டிக்கைக்கு விஜய் திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மெர்சல், சர்க்கார், இப்போது பிகில் என களத்தில் இறங்கிய விஜய்க்கு தமிழ்ராக்கர்ஸின் இந்த ஆன்லைன் லீக் மாபெரும் அதிர்ச்சி தான்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று காலை உலகம் முழுவதும் சுமார் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிகில் வெளியாகியுள்ளது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. படம் குறித்த விமர்சனங்களும் சமூகவலைத்தளங்களில் ஒருபக்கம் வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள பிகில் படத்தை சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் லீக் செய்துள்ளன. ஏற்கனவே படத்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இதுப் போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.  எந்த புதுப்படம் வெளியானாலும் அதை ஹெச்.டி. பிரிண்ட்டில் லீக் செய்துக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் விஜய் படத்தையும் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் படிக்க : Bigil vs Tamilrockers: மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வில்லனாக மாறிய தமிழ் ராக்கர்ஸ்

Actor Vijay Atlee Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment