Advertisment

தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிஜிலி... கபிஸ்கபா பாடல் பார்த்தீர்களா?

kolamaavu kokila: கோலமாவு கோகிலா படத்தில் வரும் கபிஸ்கபா பாடலில் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kolamaavu kokila song

kolamaavu kokila song

kolamaavu kokila: பட்டாசு என்று சொன்னாலே தீபாவளி நினைவுக்கு வருமோ இல்லையோ எம்.ஜி.ஆர் நகர் பிஜிலி ரமேஷ் அனைவரின் நினைவுக்கும் வருவார். ஏனென்றால் சமீப காலத்தில் அவர் சம்பாதித்த புகழ் அப்படி.

பொதுவாக பிரேங்க் வீடியோக்களை செய்யும் மீடியாக்கள் ரோட்டில் செல்பவர்களை வம்புக்கு இழுப்பார்கள். அதில் அவர்கள் டென்ஷனாகி கோவப்பட்டால் அதை காமெசியாக சித்தரித்து ஒளிபரப்புவார்கள். இது போன்ற ஒரு தனியார் நிறுவனம் நிகழ்த்திய பிரேங்கில் சிக்கியவர் தான் பிஜிலி ரமேஷ். அவரை வைத்து ஏதையாவது செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனம் நினைத்தது. ஆனால்அப்படி நினைத்த அந்த நிறுவனத்தையே வைத்து செய்துவிட்டு போனார் பிஜிலி. அந்த வீடியோ வெளியான நாளிலிருந்தே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ள பிஜிலி ரமேஷ் தற்போது கோலமாவு கோகிலா என்ற படத்தில் வரும் ‘கபிஸ்கபா’ என்ற பாடலில் நடித்துள்ளார். இந்தப் பாடலின் வீடியோவில் இவர் நடித்துள்ளார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. எனவே இந்தப் பாடலில் இவர் ஏதேனும் சிறப்பு தோற்றம் செய்திருக்கலாம் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் ரசிகர்ளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், பாடல் முழுவதுமே பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார். இந்தப் பாடலில் இவருடன் இணைந்து இன்னும் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும், பிஜிலி மட்டும் தான் இந்தப் பாட்டின் ஹைலைட்.

Kolamaavu Kokila Bijili Ramesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment