அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் வெடித்த குண்டு! பரவிய தீயால் ஏற்பட்ட விபரீதம்!

பூனேவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது குண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபரீதத்தில் லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்.

akshay kumar

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் “கேசரி” என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து வந்தது. புனே அருகில் சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்த படப்பிடிப்பில் கதாநாயகன் அக்‌ஷய் குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

fire accident in shooting spot 2

படப்பிடிப்பின் போது திடீரென அங்குத் தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாகத் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.

fire accident in shooting spot

இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகி நாசமாகியது.வேகமாகப் பரவிய தீயைப் பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் காயமின்றி தப்பியதாக தகவல் வெளியாகியது.

எந்தவித காயங்களும் இல்லாமல் அக்‌ஷய் குமார் பெரும் விபத்தில் இருந்து தப்பியது அவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Blast during akshay kumar film shooting burns the sets down

Next Story
வெள்ளித்திரையைச் சந்திக்க தயாராகுகிறது உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா வாழ்க்கை கதைsankar and kausalya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X