Advertisment

கோடைக்கு குளுமை: 50 வயது நடிகை நீச்சல் குள போட்டோஷூட் வைரல்

இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Malaikka Arora

பாலிவுட் கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா

பாலிவுட் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வரும் மலைக்கா அரோரா நீச்சல் குளத்தில் இருந்தபடி வெளியிட்டுள்ள போடடோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரே படத்தில் தையா தையா பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் மலைக்கா அரோரா.

இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார். சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர், சல்மான்கான் நடித்த தபாங், மற்றும் தபாங் 2 ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஆயுஷ்மான் குராணாவின் அன் ஆக்ஷன் ஹீரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

Malaikka Arora2

மலைக்கா அரோரா

1973-ல் பிறந்த நடிகை மலைக்கா அரோரா 1998-ல் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் எனும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மலைக்கா அரோரா கடந்த 2017-ல் அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மலைக்கா அரோரா அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இதில் அவர் வெளியீடம் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல போட்டோஃகிராபர் டப்போ ரத்னானி என்பரை வைத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் மலைக்கா அரோரா. நீச்சல் குளத்தில் சில்வர் நிற கவர்ச்சி உடையணிந்து இருக்கும் மலைக்கா அரோரா கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க தண்ணீரில் இருந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மலைக்கா ஆரோராவின் மகன் அர்ஹான் கானுக்கு 20 வயதாகியுள்ள நிலையில், 50 வயதை தொட்ட நடிகை மலைக்கா ஆரோரா, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியில் கலக்கி வருவதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment