Advertisment

தீபிகா படுகோனே: டூ பீஸ் நீச்சல் உடை எப்படி 'புனிதத்துவ' சர்ச்சையை உருவாக்கியது?

தீபிகாவின் பிகினி குறித்து மகாராஷ்டிரா எம்எல்ஏ ராம் கதம், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது” தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீபிகா படுகோனே: டூ பீஸ் நீச்சல் உடை எப்படி 'புனிதத்துவ' சர்ச்சையை உருவாக்கியது?

பாலிவுட்டில் ஷாருக்கான் தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் படத்தில் ஒரு பாடலில் தீபிகா அணிந்துள்ள ஆடை குறித்து இந்து அமைப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment

ஆரஞ்சு நிறம் இந்து கலாச்சாரத்தில் புதிய கருப்பு புள்ளியாக மாறியுள்ளது. தீபிகா படுகோனின் காவி நிற பிகினி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நிறங்களை பிரித்து ஆபத்தான மத அடையாளங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், சினிமாவை குறுகிய சிந்தனையுடன் செயல்பட தொடங்கும் நிகழ்வாகத்தான் இந்த விவகாரம் அமைந்துள்ளது.

அரசியல்வாதிகள் (பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள்) பிகினியை மட்டுமல்ல, அதன் நிறத்தையும் வைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.  தீபிகாவின் பிகினி குறித்து மகாராஷ்டிரா எம்எல்ஏ ராம் கதம், இந்துக்களின்  உணர்வுகளைப் புண்படுத்துகிறது” தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் இந்த பாடல், இந்துக்களை அவமதிக்கும் மனநிலையுடன்’ படமாக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டமன்ற சபாநாயகர் கிரிஷ் கெளதம் ஷாருக்கானுக்கு எதிராக புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார். ஷாருக் தனது மகளுடன் இந்தப் படத்தைப் பார்த்து, தனது மகளுடன் இந்த படத்தை பார்க்கிறேன் என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உலகுக்குச் சொல்ல வேண்டும்,” என்று அவர் கூறினார். ஒருவரை அவரது மகள், தாய் அல்லது மனைவியுடன் இணைத்து கொச்சைப்படுத்துவது மிகவும் பிற்போக்குத்தனமானது,

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பத்மாவத் திரைப்படத்தில் தீபிகாவின் இடுப்பளவு காட்சிக்கும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இடுப்பை டிஜிட்டலில் துணியால் மூடப்பட்டது போன்று காட்சி அமைக்கப்பட்டது.  பெண்களுக்காக மட்டுமே நடக்கும் விழாவில் மற்ற பெண்களுடன் நடனமாடும் போது ஒரு இந்து ராணியின் இடுப்பைக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் ஒரு படி பின்வாங்கி, அத்தகைய கோபத்தை ஏற்படுத்திய வண்ணத்தின் முக்கியத்துவத்தைப் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

publive-image

குங்குமப்பூ நிறம் சாக்ரல் சக்ரா அல்லது உடலின் இரண்டாவது மிக முக்கியமான ஆற்றல் மையத்துடன் தொடர்புடையது. சாக்ரல் சக்ரா நமது செரிமான மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. சிகிச்சை நோக்கங்களுக்காக இந்த நிறத்தில் கவனம் செலுத்துவது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனிநபர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்து சந்நியாசிகள் காவி அங்கிகளைத் அணிந்திருப்பார்கள். நிறம் ‘தியாகம், மதத் தவிர்ப்பு, ஒளி மற்றும் இரட்சிப்புக்கான தேடலைக் இந்த காவி நிறம் குறிக்கிறது.’ புத்த துறவிகள் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் கலவையான ஆரஞ்சு நிறத்தை ஆனந்தத்தின் நிறம் என்று நம்புகிறார்கள். ஆரஞ்சு நிறம் நெருப்பு மற்றும் சூரியனுடன் தொடர்புடையதாக இருப்பதால், ஆரஞ்சு/காவி நிற ஆடைகள் மனதில் இருளை அகற்றி கோபத்தை கட்டுப்படுத்தும் அடையாளமாக மாறியது.

அப்படியென்றால், அமைதியின் உணர்வுகளைத் தூண்டி, உங்களை ஒரு உயர்ந்த சிந்தனைத் தளத்திற்கு அழைத்துச் செல்லும் வண்ணம், இப்போது மக்கள் விஷத்தை உமிழும் ஒரு பிரச்சினையாக எப்படி மாறியது? மேலும் தீபிகாவின் பாடலை திரும்பத் திரும்ப மிகக் கவனமாகப் பார்க்காதவரை, இந்த அரசியல்வாதிகள் பிகினியில் காவி நிறத்தில் இருப்பது எப்படி என்று ஒருவர் கேள்வி எழுப்பினாலும், ஆரஞ்சு நிற பிகினிக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்பதே தெளிவான கேள்வி.

பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான காக்டெய்ல் திரைப்படத்தில், தீபிகா ஆரஞ்சு நிற பிகினி அணிந்திருந்தார், அந்த படத்தில் சைஃப் அலி கானுடன் ஆரஞ்சு நிற நீச்சல் உடையில் நீருக்கடியில் போஸ் கொடுத்தார். ஹிந்தி சினிமாவில் இதுவரை படமாக்கப்பட்ட மிக உணர்வுபூர்வமான காதல் பாடல்களில் ஒன்றான “தக் தக் கர்னே லகா” மாதுரி தீட்சித் ஆரஞ்சு நிற உடையில் அனில் கபூருடன் ஆடியிருப்பார்.

அதேபோல் 3 இடியட்ஸ் படத்தின் "ஜூபி டூபி" பாடலில் கரீனா ஆரஞ்சு நிற புடவை அணிந்து அமீர் உடன் மழையில் நடனமாடினார். மேலும் மத்திய அரசின் விருப்பமான மாற்றத்தின் முகவரான அக்‌ஷய் குமாருடன் கத்ரீனா கைஃப் ஆரஞ்சு நிற புடவை மற்றும் முதுகில் துணி இல்லாத ஆரஞ்சு ரவிக்கை அணிந்து, மிகவும் நெருக்கமான பாடலில் நடனமாடினார்.

இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பிகினி கலாச்சாரங்கள் மகிழ்ச்சியான நேரங்களாக இருந்தன, ஏனென்றால் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அல்லது சமூக தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சினிமா மத சகிப்பின்மையால் கறைபடவில்லை. யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

ஆனால் தற்போது இந்த நிலை மாறியுள்ளது. அடுத்து வெளியாக இருக்கும் மராத்தி திரைப்படத்தில் சிவாஜி மகாராஜனாக நடிக்க ராஜ் தாக்கரே அக்ஷய் குமாரை கேட்டது வெறும் தற்செயலானதா என்று யோசிக்க வேண்டும். நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான அக்ஷய் குமூரின் பிருத்விராஜ் சவுகான், சூரியவன்ஷி, ராம் சேது மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய படங்கள் இந்துக்களை பற்றியது.

மறுபுறம் ஷாருக்கான் ராஜ், ரோஹித் மற்றும் ராகுல் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார், ஆனால் அவர் ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அல்லது திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்பு, அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் முஸ்லிம்களாக இருந்தன.

publive-image

அதேபோல் சமீபத்தில் வெளியான லால்சிங் சத்தா என்ற படத்தில் ஆமிர் கான் சமீபத்தில் அறிவுசார் சவால்களுடன் சீக்கிய மனிதராக நடித்ததற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இதன் மூலம் நடிகர்கள் எப்படித் தேர்வு செய்கிறார்கள் அல்லது அவர்களது அனுமானிக்கப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. சமூக ஊடகங்கள் சகிப்புத்தன்மையின் தீப்பிழம்புகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன. அரசியல்வாதிகள் மதத்தின் சிப்பாய் போல் தங்களை காட்டிக்கொண்டு, அச்சுறுத்தல் உணர்வை உருவாக்குவதன் மூலம், எந்த காரணமும் இல்லாதபோதும் மக்களை புண்படுத்த ஊக்குவிக்க முடியும் என்பதை நம்புகின்றனர்.

காவி கவசம் அணிந்த மாவீரர்கள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, இந்து மதத்தின் ஒருங்கிணைந்த நிறங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு போன்றவை. திருமணமான பெண்கள் பச்சை வளையல், சிவப்பு செந்தூர் அணிந்து, மஞ்சள் நிற ஹால்டி பூசப்படுவார்கள். பச்சை அசோகா மற்றும் துளசி இலைகள் மத சடங்குகளின் ஒரு பகுதியாகும்.

மேலும் மகாராஷ்டிரர்கள் போன்ற சில சமூகங்களில், மணமகள் திருமணம் செய்யும் போது பச்சை அல்லது மஞ்சள் நிற புடவையை அணிவார்கள். அப்படியானால், மில்லியன் கணக்கான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றும் பல்வேறு வழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த பல வண்ணங்களை பயன்படுத்தும்போது ஒரு வண்ணத்தை மட்டும் இந்து நிறம் என்று அனுமதிதித்தோம் என்ற கேள்வி எழுகிறது.

தொற்றுநோயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கோடி இழப்புகளைச் சந்தித்த பாலிவுட் இறுதியாக மீண்டும் வீழ்ச்சியில் இருந்து எழுந்து வருகிறது. மக்கள் தொற்று நோய் பாதிப்பை மறந்து மீண்டும் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள், ஆனால் மக்கள் தியேட்டருக்கு செல்ல வேண்டுமா வேண்டாடா என்பதை இன்னும் சிலர் தீர்மானிக்கின்றனர். பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு மதத்தின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு சில துணிகளை மட்டும் வைத்து மக்களை புண்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் உணர்வை ஏற்படுத்தினால், அவர்கள் மட்டுமே பேஷரத்தை உணர வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment