scorecardresearch

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, தன்யா நடிப்பால் தப்பித்தான் ‘கருப்பன்’

விஜய் சேதுபதி விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மற்றுமொரு சிறந்த நடிப்பின் மூலம் கருப்பன் திரைப்படத்தில் களமிறங்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, தன்யா நடிப்பால் தப்பித்தான் ‘கருப்பன்’

ஆஷா மீரா

கருப்பன் திரைப்படம்
இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம்
நடிப்பு: நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நடிகை தன்யா
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு:கே.ஏ.சக்திவேல்

மதிப்பெண்கள்: 2.25/5

விஜய் சேதுபதி விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மற்றுமொரு சிறந்த நடிப்பின் மூலம் கருப்பன் திரைப்படத்தில் களமிறங்கியிருக்கிறார். ஆனால், அவரை விடவும் கொஞ்சம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் ‘கதிர்’ எனும் சிறந்த கதாபாத்திரத்தின் மூலம் முகம் காட்டியிருக்கும் பாபி சிம்ஹா கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவர். இத்திரைப்படத்தின் நாயகி கதாபாத்திரத்தை வல்லமை மிக்கதாக வடிவமைத்ததற்கு இயக்குநர் பன்னீர் செல்வத்துக்கு நன்றி. இனி ‘கருப்பன்’ விமர்சனம்.

முழு கதையையும் எடுத்துக்கொண்டால், கருப்பன் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. கதையானது 80-90களில் துவங்குகிறது. கருப்பன் (விஜய் சேதுபதி) ஜல்லிக்கட்டு வீரர். கருப்பனும், அன்புவும் (தன்யா) ஒருவரை காதலிக்க, வில்லன் கதிர் (பாபி சிம்ஹா) எரிச்சலடைகிறான். இந்நிலையில், ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில், மாயியின் (பசுபதி) மூர்க்கமான காளையை அடக்கி அவனது தங்கை அன்புவை (தன்யா) திருமணம் செய்துகொள்கிறான் கருப்பன். இப்படி நாம் பலமுறை பார்த்து பழக்கப்பட்டவன் தான் கருப்பன். ஆனால், இயக்குநர் கதாபாத்திரங்களை அழகாக வடிவமைத்ததாலும், நடிகர், நடிகைகளில் சிறந்த நடிப்பாலும் கருப்பன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

விஜய் சேதுபதி எல்லா திரைப்படங்களிலும் தனக்கென தனி முத்திரையை பதிப்பது போல, இந்த படத்திலும் பெயர் வாங்குகிறார். தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதில் எப்போதும் வல்லவராக இருப்பதே இதற்கு காரணம். எந்த திரைப்படமாக இருந்தாலும் தன் புத்திசாலித்தனம் மூலம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி உயிர் கொடுத்திருப்பதால், அது திரையில் இன்னும் உயர்த்தி காட்டுகிறது.

பாபி சிம்ஹா சிறந்த நடிப்பின் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டார் என்றே சொல்லலாம். விஜய் சேதுபதிக்கு ஏற்ற வில்லனாக பாபி சிம்ஹா தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கருப்பன் எப்படி வழக்கமான கதாநாயகன் இல்லையோ, அதேபோல கதிரும் வழக்கமான வில்லன் இல்லை. நீண்ட வசனங்கள், காதை கிழிக்கும் வகையிலான அலறல்கள் எல்லாம் இந்த வில்லனுக்கு இல்லை. ரொம்ப தந்திரமான வில்லனாக பாபி சிம்ஹா பிரகாசிக்கிறார். மிகவும் நம்பக்கூடியராகவும், வஞ்சகம் நிறைந்தவராகவும் இரு மனநிலைமையையும் ஒருசேர பிரதிபலித்திருக்கிறார் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா மற்றும் இறைவிக்குப் பிறகு கருப்பன், பாபி சிம்ஹாவுக்கு நிச்சயமாக முக்கியமான திரைப்படம்.

இவை எல்லாவற்றையும் விட கருப்பன், கதிர் இருவருக்கும் இணையாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கதாநாயகி தன்யாவுக்கு அமைந்திருக்கிறது. கதாநாயகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொருளாக ‘அன்பு’ கதாபாத்திரம் அமையவில்லை. அவளுக்கென சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. அவளின் இடைவெளியை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் அன்பு. அவளுக்கு பிடிக்காத திருமணத்தை நடத்த அவளின் அண்ணன் முற்படும்போது அதனை எதிர்க்கிறாள். தனக்கு பிடிக்காதவற்றை குறித்து மற்றவர்கள் கேட்க வேண்டும் என அவள் நினைக்கிறாள். கருப்பனை அடிக்கிறாள், பைக் ஓட்டுகிறாள், கார் ஓட்டுகிறாள், இந்த சின்ன சின்ன விஷயங்களெல்லாம் ’அன்பு’ கதாபாத்திரத்தை நம் மனதில் நிறுத்துவதற்கு கூடுதல் காரணங்களாக அமைகின்றன.

திரைக்கதை நேர்த்தியற்றதாக இருக்கின்றன. மொத்தத்தில், கருப்பன் ஸ்மார்ட்டான வணிக திரைப்படம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Characterisation and performances save this vijay sethupathi film