ஒரே பாட்டில் ஊரையே திரும்பிப் பார்க்க வைத்த சாயா சிங்!

’தெய்வமகள்’ சீரியல் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

Chaya Singh : கன்னட படங்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை சாயா சிங், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடல் இன்றும் படு பாப்புலர். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் பாடலில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆடியிருப்பார்கள்.

Chaya Singh, run serial, sun tv

கணவருடன் சாயா சிங்

சாயா சிங் தனது பள்ளி கல்வியை பெங்களூரில் உள்ள லூர்து பள்ளியில் முடித்த பிறகு, அங்குள்ள அரவிந்தோ கல்லூரியில் பட்டம் பெற்றார். 2000-ம் ஆண்டில் கன்னட திரைப்படமான ’முன்னூடி’ மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், தேசிய திரைப்பட விருதையும் வென்றது. அதன் பிறகு சில கன்னடப் படங்களில் நடித்த சாயா சிங்கிற்கு, முதல் படத்தில் கிடைத்தளவு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் கோலிவுட் பக்கம் அவரது கவனம் திரும்பியது.

தமிழில் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கும் இவர், ’கீ கொரே பொஜாபூ, டுமாகே’ என்ற பெங்காலி படத்தையும் இயக்கியுள்ளார். அதோடு பல கன்னட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள சாயா, ’தெய்வமகள்’ சீரியல் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது இவர்கள் இருவருமே ஜோடியாக ‘ரன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்கள்.

சாயா சிங்கிற்கு ஷாப்பிங் செல்வதும், சமையல் செய்வதும் பித்தமான பொழுது போக்குகளாம். அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பைப் பார்த்து பார்த்து ரசிக்கும் இவருக்கு மசாலா ஃபிஷ் கறி என்றால் கொள்ளை பிரியமாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close