Advertisment

Kadaram Kondan Movie Review: படம் முழுக்க கறுப்பு உடையில் வலம் வரும் விக்ரம்!

Kadaram Kondan Movie Review and Rating: சாமி 2 படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ இன்று வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kadaram Kondan Movie Review and Release LIVE Updates

Kadaram Kondan Movie Review and Release LIVE Updates

Kadaram Kondan Movie Review and Release Updates: ‘தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இதில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹாசனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

Kadaram Kondan Movie Review and Ratings Live, Kadaram Kondan Movie Release

ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்திற்கு இசை ஜிப்ரன். இதனை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Live Blog

Chiyaan Vikram's Kadaram Kondan Release Updates

 



























Highlights

    15:22 (IST)19 Jul 2019

    ஸ்டைலிஷ் விக்ரம்

    கடாரம் கொண்டான் படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முடி - தாடி, படம் முழுக்க கறுப்பு நிற உடை என ஸ்டைலிஷாக இருக்கிறார் விக்ரம். விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் !

    14:18 (IST)19 Jul 2019

    விக்ரமை புகழும் ரஜினி ஃபேன்ஸ்

    சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும், அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகிறார்கள் என்றும் பெங்களூர் ரஜினிகாந்த் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

    13:06 (IST)19 Jul 2019

    விக்ரம் எங்கேயோ இருந்திருக்க வேண்டியவர்

    எப்போதும் புது முயற்சிகளை கையாண்டு, அதற்காக தனது தீராத உழைப்பை தரும் விக்ரம், இந்தப் படத்திற்கும் தனது முழு உழைப்பை அர்ப்பணித்திருக்கிறார். 

    12:54 (IST)19 Jul 2019

    கடாரம் கொண்டானுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

    இன்று விக்ரமின் கடாரம் கொண்டான் வெளியாகியிருக்கும் நிலையில், அமலா பாலின் ஆடை படமும் ரிலீஸாகவிருந்தது. ஆனால் ஃபைனான்சியல் பிரச்னைகளால் அந்தப் படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் கடாரம் கொண்டான் பட காட்சிகளை தியேட்டர்களில் அதிகரித்திருக்கிறார்கள்.

    12:21 (IST)19 Jul 2019

    ரசிகர்கள் கொண்டாடும் கடாரம் கொண்டான்

    11:43 (IST)19 Jul 2019

    Vikram movie: விக்ரமின் லுக்!

    கடாரம் கொண்டான் முழுக்க முழுக்க நம்மை என்கேஜிங்காக வைத்திருக்கும் ஆக்‌ஷன் திரைப்படம். சண்டைக் காட்சிகள், விக்ரமின் லுக் மற்றும் அதன் இசைக்காக நிச்சயம் பார்க்க வேண்டும் என இந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    10:44 (IST)19 Jul 2019

    விக்ரம் ரசிகர்களின் புதுவித கொண்டாட்டம்

    இன்று வெளியாகியிருக்கும் கடாரம் கொண்டான் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிறிய வடிவிலான ‘விதைப்பந்து’ அட்டைப் பெட்டியை பரிசளித்திருக்கிறார்கள் ரசிகர்கள். வேண்டாம் என்று தூக்கி வீசினாலும், அதிலுள்ள விதைகள் முளைத்து பிற்காலத்தில் மரமாகி நமக்கு பயன் தரும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.  

    10:38 (IST)19 Jul 2019

    விக்ரம் தியேட்டர் விசிட்

    இன்று விக்ரம் நடித்திருக்கும் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸை தெரிந்துக் கொள்ள சென்னை, காசி தியேட்டருக்கு விசிட் அடித்தார் விக்ரம். அவருடன் துருவ் விக்ரம் மற்றும் கடாரம் கொண்டான் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாவும் உடன் இருந்தனர். 

    Kadaram Kondan Release: நேற்று இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் டார்ச் லைட் ஃபைட் சீனின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தனர் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தினர். இது விக்ரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    தவிர விக்ரம் நடிப்பில், ‘துருவ நட்சத்திரம்’, ‘மஹாவீர் கர்ணா’ ஆகியப் படங்கள் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வருகிறது.

    Kamal Haasan Chiyaan Akshara Haasan
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment