ரஜினிக்கு சினிமா இயக்குனர் ஆதரவு: ‘எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுப்போம்’

தமிழ் சினிமாவில் 2 தலைமுறைகளை பார்த்த நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது நடிப்பில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம் தர்பார். அதனைத் தொடர்நது தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம்  இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31-ந்தேதி கட்சி தொடங்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். […]

தமிழ் சினிமாவில் 2 தலைமுறைகளை பார்த்த நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது நடிப்பில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம் தர்பார். அதனைத் தொடர்நது தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம்  இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31-ந்தேதி கட்சி தொடங்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பல ஆண்டுகளாக இவர் அரசியல் கட்சி தொடங்குவார் என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அவரின்இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இதனை முன்னிட்டு கடந்த டிசம்பர் 12-ந் தேதி ரஜினி பிறந்த நாள் அன்று அவரது ரசிகர்கள் வழக்கத்திற்கு மாறாக பெரும் சந்தோஷத்தில் கொண்டாடினா.

இந்நிலையில், ரஜினி கட்சி தொடங்குவது அவரது ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அரசியல் தலைவர்கள் மற்றும் விமாசகர்களிடம் இருந்து ஆதரவு குரலும் எதிர்ப்புக்குரலும் சம்மாக வந்த வண்ணம் உள்ளது. இதனையெல்லாம் பொருட்படுத்தாத ரஜினி கட்சி தொடங்குவதற்குள் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என முடிவெடுத்து ஹைதராபாத்தில் அந்த படத்தின்படப்பிடிப்பில் மும்பரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ரஜினியை எதிர்ப்பவர்களுக்கு நாகரீக முறையில்தக்க பதிலடி கொடுப்போம் என திரைப்பட இயக்குநர் இராணா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஹிப்பாப் ஆதி ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், வெளியான நான் சிரித்தால் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் இராணா சமூகவலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

மேலும் ரஜினியின் தீவிர ரசிகரான இராணா தனது ட்விட்டர் பதிவில்,

“ஒரு நல்ல மனிதன், நல்ல நோக்கத்துடன் வரும்போது, அவர் மீது வன்மம் உமிழ்ந்து கொண்டும், அவரின் மதிப்பை, எண்ணத்தை குறைத்து பேசிக்கொண்டும் இருப்பவர்களை கண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நாகரீகமான முறையில் தக்க பதிலடி பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும். இனி போர் நேரம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரஜினிகாந்தின் அரசியல் கட்சி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்திகள் குறித்து ரஜினிகாந்த் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cinema director supports to rajini for new political party against protesters

Next Story
சர்வதேச திரைப்பட விழாவில் கோலோச்சும் சூரரைப் போற்று, அசுரன்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express