இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய் சைக்கோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் யூ-டியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாறுபட்ட தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் சாணிக் காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.
இந்தப் படம் பழிவாங்கும் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ்லியா நடித்துள்ள படம் மே 6ஆம் தேதி ரிலீஸ்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படம், தமிழில் கூகுள் குட்டப்பா என தயாராகியுள்ளது.
இந்தப் படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன்-லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர்.
யோகி பாபுவும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோ
நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் சிம்ப்ளிஃப்லி டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது. அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்போ பழைய ஐஸ்வர்யா இல்லை… ரொம்ப வைப்ரன்ட்: ஒர்க் அவுட் வீடியோ
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்ப்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் பூஜையிலும் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.