Advertisment

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை.. பெரிய பெரிய ஹீரோக்களும் பொறாமை படும் அளவுக்கு!

2021- ம் ஆண்டு வரை சிவகார்த்திகேயன் ஃபுல் பிஸி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cinema news

cinema news

cinema news : எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய பெரிய நிறுவனங்களுடன் புது படங்களில் ஒப்பந்தமாகி பெரிய பெரிய ஹீரோக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Advertisment

பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியில் வெறும் காமெடியான அறிமுகமாகி மெல்ல மெல்ல ஷார்ட் ஃப்லிம், ஆங்கரிங், சைட் ரோல் என தனது திறமையை வளர்ந்துக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது நிற்கும் இடம் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்க திரைப்படம் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம். 'போஸ் பாண்டி' என்ற பெயர் பட்டித்தொட்டி எங்கும் பரவ செய்தது அந்த திரைப்படம் தான். தனக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொண்ட சிவா, சரியாக காய் நகர்த்தி இன்று முன்னணி நடிகர்கள் லிஸ்டில் குறுகிய காலத்திலேயே இடம் பிடித்து விட்டார். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாது.

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த சிவகார்த்திகேயன் திரை வாழ்கையில் சமீபத்தில் வெளியான 2 படங்கள் தோல்வியை தழுவின. ஆனாலும் அவருக்கு புதுபடங்கள் வரும் வாய்ப்பு சற்றும் குறையவில்லை.

ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்து வரக்கூடிய படம் மிஸ்டர் லோக்கல் இத்திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் .மிஸ்டர் லோக்கல் திரைப்படம் சிவகார்த்திகேயனின் 13-ஆவது திரைப்படமாக வெளியாக இருக்கின்றது

இதையடுத்து சிவகார்த்திகேயனின் 14-ஆவது திரைப்படமாக இன்று நேற்று நாளை, இந்த படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் 15-வது படத்தை இரும்புத்திரை முத்தையா இயக்கயிருக்கிறார்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் .இதையடுத்து மேலும் நான்கு திரைப்படங்களும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 16-வது திரைப்படத்தை பாண்டியராஜ் இயக்க இருக்கிறார் . இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயன் 17_ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் , 18_ஆவது நெல்சன் இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் தனது அடுத்த படமாக சிவகார்த்திகேயன் வைத்து இயக்க இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இப்படி அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கக் கூடிய 7 திரைப்படங்கள் தொடர்ந்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளது .2021- ம் ஆண்டு வரை சிவகார்த்திகேயன் ஃபுல் பிஸி என்றும் கால்ஷீட் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் இருக்கும் சில முன்னணி ஹீரோக்களையும் பொறாமைப்பட வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன.

இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்றால் அப்போது கண்டிப்பாக சிவகார்த்திகேயன் சுத்தி போடுவது நல்லது.

Tamil Cinema Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment