Advertisment

5 மொழிகளில் முன்னணி நடிகரின் படம்.. ஷாருக்கான் பட அப்டேட்.. மேலும் செய்திகள்

படம் 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 5 மொழிகளின் டிரைலரும் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
5 மொழிகளில் முன்னணி நடிகரின் படம்.. ஷாருக்கான் பட அப்டேட்.. மேலும் செய்திகள்

டான் பட தேதி மாற்றம்

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெற்றிப் படங்களில்  இடம்பெற்றிருக்கும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கதாநாகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில நடித்தவர் ஆவார்.

டான் படம் இந்த மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றி புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்," இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாவதை கருத்தில் கொண்டு டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரையில் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா

நடிகர் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் நிலையில் சூர்யாவின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தமிழ் திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும் வெற்றிகரமாக தங்கள் திரைப்பயணத்தை நடத்தி வருகிறார்கள்.

சூர்யாவுக்கு பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. 

தற்போது பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் பாலாவின் இந்த கதையில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குமுன் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நாச்சியார் படத்தில் பாலாவுடன் ஜோதிகா இணைந்து பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் ஹாலிவுட் படம் ரிலீஸ் இல்லை

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தி பேட்மேன்” அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல வெளிநாட்டுகளில் மார்ச் 4 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ரஷியாவில் வார்னர் பிரதர்ஸ் தி பேட்மேனின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

வால்ட் டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ்  ஆகிய நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் படங்களின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்தனர்.

‘சிங்கம்’ அடுத்த கட்டத்துக்கு போயிருச்சு! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சூர்யா ரசிகர்கள்

5 மொழிகளில் பிரபாஸ் பட டிரைலர்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் கைரேகை பார்க்கும் நிபுணராக பிரபாஸ் வருகிறார்.

சத்தியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 5 மொழிகளின் டிரைலரும் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மொழி டிரைலர் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஷாருக்கான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் பிரபலமானவர். இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது ஒரு படம் ரிலீஸ் ஆனால் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைக்கும்.

இவர் பதான் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆப்ரஹாம், சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நடிகர் ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இது காலதாமதம் என்பதை அறிவேன். ஆனாலும் தேதியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை (ரசிகர்கள்) 2023 ஜனவரி 25ஆம் தேதி திரையில் சந்திக்க வருகிறேன்.

பதான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

யஷ்ராஜ் நிறுவனத்தின் 50 ஆவது படத்தை உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் கொண்டாடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீடியோவையும் அவர் இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில், தீபிகாவும், ஜான் ஆப்ரஹாமும் ஷாருக் கானின் கதாபாத்திரத்தை விவரிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment