Advertisment

டிரெண்டிங்கில் மம்முட்டி பட டீசர்.. ஜான்வி கபூரின் உருக்கமான பதிவு.. மேலும் செய்திகள்

நடிகர் விக்ரமும் – மகேஷ் பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

author-image
WebDesk
New Update
டிரெண்டிங்கில் மம்முட்டி பட டீசர்..  ஜான்வி கபூரின் உருக்கமான பதிவு.. மேலும் செய்திகள்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரா மம்முட்டி நடிப்பில் பீஷ்ம பர்வம் என்ற பெயரில் படம் தயாராகியுள்ளது.

Advertisment

இந்தப் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார்.

அமல் நீரத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனகா, அனசுயா பரத்வாஜ், ஸ்ரீநாத் பாசி, அண்மையில் காலமான லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் இயக்குநரே தயாரிக்கவும் செய்துள்ளார்.

படம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டீஸர் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியானது. வெளியாகி 13 மணி நேரத்துக்குள் 10 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

டிரெண்டிங்கில் 11 ஆவது இடத்தில் உள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் படம்.

நாளை வெளியாகிறது பவன் கல்யாண் படம்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் பவன் கல்யாண். இவரது படத்துக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருந்து வரும். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் பவன்.

ஹிந்தியில் அமிதாப் டாப்ஸி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். வினோத் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அத்துடன் இளைஞர்களுக்கு தேவையான நல்ல சமூகக் கருத்தையும் கொண்டிருந்தது.

இந்தப் படத்தின் ரீமேக்கில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருந்தார். வக்கீல் சாப் என்ற அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது பீம்லா நாயக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படமும் ரீமேக் படம் தான். இந்தப் படம் ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் ஆகும். மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்த படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.

இவருடன் பாகுபலி புகழ் ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் ஏற்ற கதாபாத்திரத்தை இவர் ஏற்றுள்ளார். பிஜு மேனன் ஏற்று நடித்த ஐயப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.

அவர் இந்தப் படத்தில் காவல் துறை உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.

படத்தின் டீஸரை இதுவரை 1 கோடி முறைக்கு மேல் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள்: உருக்கமான பதிவை வெளியிட்ட ஜான்வி கபூர்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதேவி கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இவருக்கு குஷி கபூர், ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள்.

சொன்னதுபோலவே நடந்துடுச்சு… பால் பாக்கெட்டுகளை அபேஸ் செய்த ‘வலிமை’ ரசிகர்கள்!

ஸ்ரீதேவியின் கணவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர். இவர் தான் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்தவர்.

அஜித்-வினோத் கூட்டணியின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

ஸ்ரீதேவியின் நினைவு நாளை (ஃபிப்.24) முன்னிட்டு, அவரது மகள்கள் இருவரும் தனது தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

publive-image

இவரது தாயாரின் நினைவு நாளான இன்றுதான் உலகம் முழுவதும் வலிமை படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகை காலமானார்..

பிரபல கன்னட இளம் நடிகை ரச்சனா. பெங்களூருவை சேர்ந்த இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். ரேடியோ ஜாக்கியாகவும் ஜொலித்தவர்.

ரச்சனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. அவருக்கு வயது 39.

இளம் நடிகையான ரச்சனா மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஒரே படத்தில் நடிகர் விக்ரம்-மகேஷ் பாபு ?

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. பரசுராம் இயக்கத்தில் சர்காரி வாரி பாடா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற கலாவதி பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, நடிகர் விக்ரம் அவரது மகள் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்த மகான் படம் அமேஸான் பிரைமில் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விக்ரமும் – மகேஷ் பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், அந்தச் செய்தி தவறானது என்று நடிகர் விக்ரமின் மேனேஜர் சூர்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சியான் விக்ரம் மகேஷ் பாபுவுடன் இணைந்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இதுபோன்று வெளியாகும் வதந்திகளை ஆதாரமற்றவை. ஊடகத்தினர் இதை தெளிவுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment