நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார் மோகன். இந்த படத்திற்கு ‘ஹரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஜய் ஶ்ரீ இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் மோகன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கிறார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை குஷ்பு படத்தின் டீசரை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
#HARAA First look title teaser starring#Mohan
— KhushbuSundar (@khushsundar) April 14, 2022
@iYogiBabu@im_rajendran @manobalam streaming now on @SonyMusicSouthhttps://t.co/9fpca1heHt
A @vijaysrig Action#JMcinemas #KovaiMohanraj @onlygmedia @leanderleemarty @onlynikil #NM
இந்தப் படத்தை வீட்டிலேயே பாருங்க…
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். அஞ்சலி நாயர், லால் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், வீக் எண்டில் எந்தப் படத்துக்கும் திரையரங்கில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓடிடியில் பார்ப்பதற்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை என்பதால் அவர் இதுபோல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Meanwhile if there is difficulty in getting tickets for the weekend films, here is our #TaanakkaranRunningSuccessfully in @disneyplusHSTam
— SR Prabhu (@prabhu_sr) April 15, 2022
Keep showering the love 😊😊😍😍🤗🤗 https://t.co/WOlODJVUm9
வைரலாகி வரும் அலியா பட் திருமண புகைப்படங்கள்
ஒரு வழியாக வெகுநாட்களாக பேசப்பட்டுவந்த பாலிவுட் நட்சத்திரங்களான ரண்பீர் கபூர், அலியா பட் திருமணம் முடிந்தது.
இவர்களின் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும் தற்போது மணம் முடித்துள்ளனர். திரையுலகப் பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும் இவர்களின் திருமணத்தில் பங்கேற்றனர்.
அந்தப் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
கே.ஜி.எஃப் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தற்போது அதன் 2ஆம் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
யஷ், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் நல்ல வசூலை பார்த்து வருகிறது.
டிக்கெட் புக்கிங்: அவெஞ்சர்ஸ், பாகுபலியை விஞ்சிய கே.ஜி.எஃப்; பீஸ்ட் நிலை என்ன?
இந்த நிலையில், படத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதாவது படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு படத்தின் இறுதியில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “