Advertisment

பெரும் எதிர்பார்ப்பில் ஷாருக்கானின் பதான்... பாலிவுட்டில் யூனிவர்ஸ் படம்?

ஷாருக்கானின் பதான் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரிடையேவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
பெரும் எதிர்பார்ப்பில் ஷாருக்கானின் பதான்... பாலிவுட்டில் யூனிவர்ஸ் படம்?

கெவின் பீய்ச் மற்றும் மார்வெல் படங்கள் ஒரு தசாப்தற்கு முன்பே ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில், இறுதியாக இந்தியாவிலும் இந்த மாதிரியான படங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இதில் நாளை (ஜனவரி 25) வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரிடையேவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் ரீ-என்டரி கொடுப்பதாலும் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Advertisment

அதே சமயம் மார்வெல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே பாலிவுட்டில் யுனிவர்ஸ் படங்கள் வர தொடங்கிவிட்டன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த 2011-ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தை சொல்லாம். 2018-ல் வெளியாக ரன்வீர் சிங்கின் சிம்பா படத்தில் சிங்கம் அஜய்தேவ்கன் ஸ்பெஷல் என்டரி கொடுத்திருப்பார்.

அதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சூரியவம்ஷி படத்தில் அஜய் தேவ்னகன், அக்ஷைய் குமார் ரன்வீர் சிங் ஆகியோர் தங்களது முந்தைய படத்தின் கேரக்டர்களாகவே வந்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா தலைமையிலான இந்தியன் போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், ரன்வீர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த புதிய திரைப்படம் ரசிகர்களை கவரும் என்று கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் தினேஷ் விஜன் ஹிட் ஹாரர் காமெடி பாணியில் வெளியான ரூஹி முதன்முதலில் நிறுவப்பட்ட யுனிவர்ஸை விரிவுபடுத்த முடிவு செய்தார்.  ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றியடையவில்லை. அதே சமயம் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு பீடியா (Bhediya) வசூலில் குறை வைத்தாலும் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுக்களை பெற்றது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், 70 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டபது. அனால் திகில் காமெடி என்று அழைப்பதற்கு பதிலாக 'கிரியேச்சர் காமெடி' என்று அழைத்தனர்.

இந்த விதத்தில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கையாண்ட ஒரு உத்தியாக இருந்தது, அவரது தயாரிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்தாலும் படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி என்பதை தெளிவாக கூறியிருந்தார். படத்தில் வருவாய், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே வருவாய் எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை ஜோஹர் சமீபத்திய போட்காஸ்ட் தோற்றத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு திரைப்படம் லாபம் ஈட்டத் தொடங்க அதன் பட்ஜெட்டை இருமடங்காகச் செய்ய வேண்டும் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி.

ஆனால் பிரம்மாஸ்திரா ‘அஸ்ட்ராவர்ஸ்’ தொடரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதன் தொடர்ச்சிகள், ஸ்பின்ஆஃப்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தொடர்களை உள்ளடக்கியதாக இயக்குனர் அயன் முகர்ஜி கூறியிருந்தார்.  இந்த முயற்சியில் நம்பிக்கையை ஏற்படுத்த இது மிகவும் மறுக்க முடியாத வெற்றியாக இருக்க வேண்டும் என்பதால், எதையும் பொருட்படுத்தாமல், ஜோஹர் மற்றும் குழுவினர் திரைப்படத்திற்கான பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டனர்.

அந்த வரிசையில், தமிழ்நாட்டில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்கிய விக்ரம் படத்தில் கைதி படத்தின் யூனிவர்ஸ் இருந்தது. இந்த படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததன் மூலம், தான் இயக்கிய படங்களின் யூனிவர்ஸை வடிவமைப்பதில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியும், தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளை சேர்ந்த பெரும்பாலான இயக்குனர்கள் தங்களது அனைத்து படைப்புகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வரும் நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது ரீ-என்டரி படம் மூலம் தனது யூனிவர்ஸை உருவாக்க முயற்சிக்கிறார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சல்மான்கான் நடிப்பில் ஏற்னவே டைகர் படத்தின் 2 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது 3-ம் பாகம் தயாராகி வருகிறது.

அதேபோல் ஹிருத்திக் ரோஷன் நடித்த வார் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. டைகர் மற்றும் வார் படங்களை வைத்து ஒய்ஆர்எஃப் நிறுவனம், யூனிவர்ஸ் படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தற்போது ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தை இயக்கியுள்ளார். வார் படத்தில் நடித்த அனுப்ரியா கோயங்கா மற்றும் அசுதோஷ் ராணா ஆகியோர் பதான் படத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தில் டைகர் கேரக்டரில் சல்மான் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதேபோல் ஹிருத்திக் ரோஷனும் கேஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆனால் பதான் படத்தில் ஷாருக்கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகிய 3 ஆக்ஷன் ஹீரோக்கள் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவர்களை வைத்து வருங்காலத்தில் யூனிவர்ஸ் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த தொடரை பின்பற்ற கூட வாய்ப்புள்ளது.

சல்மான்கான் நடித்த ஏக் தா டைகர் இது ஒரு சோகமான காதல் திரைப்படம், அதைப்பற்றி யாரும் நினைக்கவில்லை என்றாலும், அடுத்து வெளியான டைகர் ஜிந்தா ஹை ஒரு தொடரை உருவாக்க அடித்தளம் அமைத்தது என்று சொல்லலாம். முதல் திரைப்படத்தின் அனைத்து தவறுகளையும் தவிர்த்து, ஆழமான கதையில் வேரூன்றிய உளவு கதையுடன் வெளியான டைகர் ஜிந்தா ஹை வெற்றிப்படமாக அமைந்தது.. அடுத்து வெளியான வார் படம் யூனிவர்ஸ்க்கான அடுத்த அத்தியாயத்தை தொடங்கியது. ஆனால் அப்போதும் கூட, ஒய்ஆர்எஃப் இந்த தொடருக்கான திட்டத்தை அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.  ஏனெனில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் ஒரு படத்தில் இணைப்பது சாத்தியமா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை..

மேற்கத்திய நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில்  நட்சத்திர அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்து போகத் தொடங்கியது, இந்திய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல நட்சத்திரங்களை ஒரே படத்தில் இணைப்பது வரலாற்று ரீதியாக கடினமாக உள்ளது, குறிப்பாக ஒரே மாதிரியான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரே படத்தில் இணைப்பது ஈகோக்கள் அல்லது சம்பள பிரச்னை உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் யூனிவர்ஸ் திரைப்படங்கள் உண்மையில் ஒன்றாக வரும் சில சந்தர்ப்பங்களில், ஒரு நட்சத்திரம் மற்றவற்றை விட குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த சுயவிவரத்தைக் கொண்டிருப்பதாகும். இதற்கு உதாரணமாக ஹவுஸ்ஃபுல் அல்லது கோல்மால் தொடரை கூறலாம்.

இதனிடையே ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள பதான் படம் வெற்றி பெற்று சினிமாவில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் சமீப ஆண்டுகளாக கிண்டல் செய்து வரும் நட்சத்திரங்கள் நிறைந்த ராமாயணம் மற்றும் மகாபாரதம் திரைப்படங்களுக்கு மிகவும் மாற்றாக பதான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Bollywood Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment