Advertisment

மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா : ஜனவரி 5, 6ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து

நடிகர் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 5, 6ஆம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா : ஜனவரி 5, 6ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisment

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, வருகிற ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. புக்கட் ஜலீல் இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தக் கலைவிழாவில், கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளும் நடைபெற உள்ளன.

இந்தக் கலைவிழாவில், ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு, நடிகர் சங்கத் தலைவர் நாசரே நேரில் சென்று அழைப்பு விடுத்ததாகவும், அவர்களும் வர ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கலைநிகழ்ச்சியில் அனைத்து நடிகர் - நடிகைகளும் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரி, தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது. கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விவாதித்து, நடிகர் சங்கம் கேட்டபடியே இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க தயாரிப்பாளர் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Tamil Cinema Nadigar Sangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment