Advertisment

தி லெஜண்ட் இஸ் பேக்... பேய் மாமாவாக வருகிறார் நடிகர் வடிவேலு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News in tamil

News in tamil : இந்தியா ட்ரெண்ட் நேசமணி

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

வைகைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் வடிவேலு, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட சில படங்களிலும் காமெடி காநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பேய் மாமா படத்தில் நடிகர் வடிவேலு

கடந்த 2015ல் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கத்திச்சண்டை, ஷிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் இவர் நகைச்சுவை வேடமேற்று நடித்தார். இந்நிலையில், நான்கு வருடங்கள் கழித்து, தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் வடிவேலு.

comedian vadivelu in peimama, பேய் மாமா படத்தில் நடிகர் வடிவேலு

டைரக்டர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், பேய் மாமா என்ற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tamil Cinema Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment