Advertisment

நேர்கொண்ட பார்வை படத்தைப் பற்றி ஆபாச விமர்சனம்! வரிந்துகட்டும் பிரபலங்கள்!

Nerkonda Paarvai Movie review by Valai Pechu: நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைப் பற்றி விவாதிக்கும் போது, சினிமா விமர்சகர்களான ஆர்.எஸ்.ஆனந்தம், ஜே.பிஸ்மி சி. சக்திவேல் ஆகியோர் பாலியல் வக்கிர கருத்துகளை தெரிவித்ததற்காக சர்ச்சைக்குள்ளாகியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
most impressed films of 2019, nerkonda paarvai

எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை பெண்களுக்கான படமாக உருவாகி இருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற நோ மீன்ஸ் நோ வசனம், தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. Read more at: https://tamil.filmibeat.com/news/top-10-best-tamil-movies-of-2019-list-is-here/articlecontent-pf118968-066207.html

மனோஜ் குமார்

Advertisment

Nerkonda Paarvai Tamil Movie Review: நடிகர் அஜித்தின் சமீபத்திய திரைப்படமான நேர்கொண்ட பார்வை பற்றி விவாதிக்கும் போது, தமிழ் சினிமா விமர்சகர்களான ஆர்.எஸ்.அனந்தம், ஜே.பிஸ்மி மற்றும் சி. சக்திவேல் ஆகியோர் பாலியல் வக்கிர கருத்துகளை தெரிவித்ததற்காக சர்ச்சைக்குள்ளாகியுள்ளனர். மூன்று பேரும் ஆணாதிக்க கருத்தை வெளிப்படுத்துகிற அந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

இந்தியில் வெற்றி பெற்ற பிங் படத்தின் தமிழ் ரீமேக் தான் அஜீத் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனலான வலைப்பேச்சுவின் விமர்சகர்கள், இந்த படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்கள், வெளியே செல்லும் மாடர்ன் பெண்கள், அது ஆண்கள் அவர்களை குறிவைக்க ஒரு உறுதியான காரணமாக இருக்கிறது. அதற்காக இந்த பெண்கள் அதை கேட்பார்களா? என்று கூறுகிறார்கள்.

இப்படியான பெண்கள் மீது பரிதாபம் ஏற்படுகிறதா, என்றால் இல்லை என்று வலைப்பேச்சுவின் விமர்சகர் அனந்தம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், அவர்கள் பார்ப்பதற்கு பணக்காரப் பெண்களை போல இருக்கிறார்கள். அவர்கள் பப்புக்கு போகிறார்கள். மது அருந்துகிறார்கள். அவர்கள் 19 வயதிலேயே உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள். பிறகு, அவர்கள் மேலும் 2 ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இந்த பெண்களைப் பற்றி எல்லா விஷயமும் நமக்கு தெரிந்ததுதான். அதனால், அவர்களுக்கு என்ன நடந்தால் என்ன என்று யாரும் கவலைப்படுவதில்லை என்று நினைப்பதாக பேசியுள்ளார்.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அனந்தம் கூறுகையில், இந்த படத்தில் வரும் பெண்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுடைய வாழ்க்கை முறை காரணமாகவே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தான் இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்று கூறுகிறார்.

பிஸ்மி, அவர்கள் வட மாநில பெண்கள் என்று கூறுவதன் மூலம் வடக்கு - தெற்கு முரணை கூறி ஒரு தவறான விஷயத்தை மேலும் இரண்டு மடங்காக்குகிறார். “பெண்கள் பப்புகளுக்கு செல்வதும், உடலுறவு கொள்வதும் வடக்கில் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. அதனால்தான், பிங்க் படம் அங்கே அத்தகைய பெரிய வெற்றியை பெற்றது. அதனால், பார்வையாளர்களும் அதை பெரிய குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின்படி, இந்த வகையான விஷயங்கள் நம்மை வித்தியாசமாக உணரவைக்கிறது. அதனால், அவர்களுக்கு என்ன நடந்தாலும் அக்கறை காட்டக்கூடாது என்று நாங்கள் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

விமர்சகர்களின் இந்த கருத்துக்கு பிரபலங்களும் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

“வலைப்பேச்சு எப்போதுமே, அவநம்பிக்கையான, வெட்கமில்லாத, படிக்காத, வெறுக்கத்தக்க மஞ்சள் பத்திரிகை ஜர்னலிசம் செய்கிறது. இவர்களைப் போன்றவர்களிடமிருந்து தரமானதை எதிர்பார்ப்பது நேர விரயம்தான். அவர்கள் தங்களுடைய பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுடைய அதிகாரத்தை நீக்க வேண்டும். அவர்கள் பத்திரிகையாளர்கள் என்று அழைப்பதை நிறுத்துங்கள். உண்மையான பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி முதலில் தங்கள் தொழிலைக் காப்பாற்ற வேண்டும்” என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “திரைப்படத்துறை சகோதரர்கள் தெளிவாக ஒற்றுமையுடன் பத்திரிகையாளர்கள் இடையே நேர்மையானவர்களை வேறுபடுத்துங்கள். தவறானவர்களை, பி.ஆர்.ஓ-க்கள், சினிமா தயாரிப்பாளர்கள் பிளாக்லிஸ்ட்டில் வைக்க வேண்டும். வதந்திகள் கலாச்சாரத்தை மாற்ற முடியாது. இருப்பினும், அதை எதிர்த்து நீங்கள் போராட முடியும். இந்த மோசமான பழக்கத்தை (நோயை) மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடகரும் மீ டூ பிரச்னையை முன்னெடுத்தவருமான சின்மயி ஸ்ரீபாதா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்றாட பெண் வெறுப்பு கருத்துகள் 3 மைய நீரோட்ட விமர்சகர்களால் நியாயப்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஹஹாஹா... அவர்கள் ஒரு டுவீட் போடுவதற்குகூட மதிப்பில்லாதவர்கள். ஏனென்றால், நிறைய மக்கள் அவர்களுடைய முட்டாள்தனமான விமர்சனத்தை பார்ப்பார்கள். அட கடவுளே, இவர்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள்..? நீங்கள் நிஜமாகவே சொல்கிறீர்களா? வெளியே செல்லும் பெண்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லையா.??” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பிரச்னையானதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோ வலைப்பேச்சு யூடியுப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

“நேர்கொண்ட பார்வை படத்தின் சமீபத்திய விமர்சன வீடியோவில் எங்களுடைய சில கருத்துகள் பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று அறிந்திருக்கிறோம். மேலும், இந்த கருத்துகளை வெளியிட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம். அதனால், அந்த குறிப்பிட்ட வீடியோ நீக்கப்பட்டது.” என்று வலைப்பேச்சுவின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Cinema Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment