‘இந்த அப்பாவித்தனத்தை விட்டுவிடாதே சிவாங்கி’ சிம்பு அன்பில் நெகிழ்ந்த வீடியோ

cook with comali : குக் வித் கோமாளி பைனலில் சிம்பு தன்னை புகழ்ந்து பேசும் வீடியோவை வெளியிட்டு நன்றி சொன்ன ஷிவாங்கி.

Cook with Comali Shivangi krishnakumar Youtube Channel Tamil

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கரில் பாடகியாக வந்த அவர் தனது க்யூட்டான பேச்சால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். அதிலும் குக் வித் கோமாளிக்கு பிறகு அவரது இமேஜ் வேற லெவலுக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து குவிகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின் சமூக வலைதளங்களில் ஷிவாங்கியை பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

கடந்த வாரம் குக் வித் கோமாளி 2ம் சீசன் இறுதிப்போட்டி வெளியிடப்பட்டது. அதில் சிம்பு தான் கெஸ்டாக கலந்துகொண்டார். அதில் அவர் குக்குகளுக்கு மட்டுமின்றி கோமாளிகளுக்கும் விருது கொடுத்தார். கோமாளிகளையும் பாராட்டி பேசிய அவர், ஷிவாங்கியை புகழ்ந்து பேசினார். சிம்பு தன்னை அதிகம் பாராட்டி பேசிய வீடீயோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் ஷிவாங்கி. அதற்காக நன்றியும் கூறி உள்ளார்.

இந்த வீடியோவை பதிவிட்டு சிம்பு சார் உங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என ஷிவாங்கி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali 2 final simbu praises sivaangi

Next Story
மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடுKollywood News Dhanush joins hands with Mari Selvaraj for his next movie
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com