Advertisment

டான்ஸ்லயும் புகழ் காமெடி பண்றாரு... சிவாங்கி இந்த டீம்ல இல்லையே! மாஸ் வீடியோ

குக் வித் கோமாளி பாலா, புகழ்,குரேஷி ஆகியோர் சேர்ந்து நடனமாடிய வீடியோவை பாலா சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
டான்ஸ்லயும் புகழ் காமெடி பண்றாரு... சிவாங்கி இந்த டீம்ல இல்லையே! மாஸ் வீடியோ

Cook With Comali Pugal Dance Viral Video News : விஜய் டிவி யில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 புகழ், பாலா, சிவாங்கி, அஸ்வின் என இவர்களின் நகைச்சுவை அலப்பறைகளால் கோடிக்கணக்கான தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Advertisment

தனது அபார நகைச்சுவை நடிப்பால், ரசிகர்களை கொள்ளை கொண்டு வரும் புகழ், முன்னனி நடிகர்களான விஜய், அஜித், அருண் விஜய் என நட்சத்திரங்களுடன் காமெடியானாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சுமார் 6 படங்களை கையில் வைத்துக் கொண்டு, தமிழ் சினிமாவின் பிஸி ஆக்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஒன்றில், குக் வித் கோமாளி நட்சத்திரங்களான பாலா, புகழ்,குரேஷி ஆகியோர் சேர்ந்து நடனமாடிய வீடியோவை பாலா சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் புகழ், நடிப்பில் மட்டும் தனது நகைச்சுவையை காட்டாமல், நடனத்திலும் காட்டியுள்ளார். அவரின் நையாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் லைக்குகளை தெரிக்கவிட்டு வருகின்றனர்.

புகழின் ரசிகர்கள் பலர், அவரின் நடனத்துக்கு தங்களது எண்ணங்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். ரசிகர் ஒருவர், ‘தல, டான்ஸ் பண்ணும் போது கூட எப்படி சிரிக்க வைக்குற’, என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், குரேஷிக்கு பதிலா சிவாங்கி இருந்தா, ரெண்டு அண்ணன் தங்கச்சி காம்போ செம்மயா இருந்துருக்கும்; என பதிவிட்டுள்ளார்.

publive-image

மற்றொரு ரசிகர், ‘பாலாவும் புகழும் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கீங்க, உங்கள பாக்க சந்தோஷமா இருக்கு’ என பதிவிட்டுள்ளார். இதனிடையே, வீடியோ பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே லட்சங்களில் லைக்குகளை வாங்கிய புகழ் மற்றும் பாலாவின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Cook With Comali Shivangi Cook With Comali Pughal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment