Advertisment

ரொம்ப மிஸ் பண்றேன் : வீடியோவை பார்த்து கலங்கிய ஷிவாங்கி

Cook With Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை சிவாங்கி தனது சமூகவலைதள பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ரொம்ப மிஸ் பண்றேன் : வீடியோவை பார்த்து கலங்கிய ஷிவாங்கி

Cook With Comali Tamil News:  ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போன விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனைவிட கடந்த ஆண்டு இறுதியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி சீசன் 2-க்கு மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. குக்கள் மற்றும் கோமாளிகள் செய்யும் சேட்டைகளுக்காகவே இந்த நிகழ்ச்சி பெரும் ஹிட் அடித்தது.

Advertisment

இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளிகளாக வலம் வந்த ஷிவாங்கி, அஷ்வின், புகழ், பாலா என பலர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இதனால் இந்த நிகழ்ச்சியை விரைவில் முடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று தமிழ்புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதி நாளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ்நாராயணன், நடிகர் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.  மக்களுக்கே நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்ற பெரிய வருத்தம் உள்ளது, இதில் பிரபலங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை ரொம்ப மிஸ் செய்வதா கூறி வருகின்றனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வீடியோவை தொலைக்காட்சி ஷேர் செய்ய அதைப்பார்த்த ஷிவாங்கி மிகவும் மிஸ் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Shavangi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment