’வதந்திகளை பரப்பாதீர், கிரேஸி மோகன் மரணம் இயற்கையானது தான்’ – மாது பாலாஜி!

முந்தின நாள் நைட் பெருமாளுக்கு 12 கவிதை எழுதினாரு.

By: June 12, 2019, 1:14:14 PM

நகைச்சுவை நடிகர், நாடக எழுத்தாளர், வசனகர்த்தா என பல திறமைகளோடு அறியப்படும் கிரேஸி மோகன் கடந்த திங்கட் கிழமை மதியம் இயற்கை எய்தினார்.

இந்நிலையில் கிரேஸியின் சகோதரர் மாது பாலாஜி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அவர் (கிரேஸி மோகன்) வியாதி வந்தோ, கஷ்டப்பட்டோ சாகல. இது எதிர்பாராம இயற்கையா நடந்த மரணம். 10-ம் தேதி காலைல ஒரு ஏழரை, ஏழே முக்கால் மணிக்கு நான் மோகனை மீட் பண்ணேன், வாக்கிங் போய்ட்டு வந்து. எப்போவும் போல ரொம்ப ஹுமரஸா இருந்தாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தாரு.

அவருக்கு சுகர் கிடையாது, பிபி கிடையாது. எல்லாரும் தவறான தகவல்களை போடுறாங்க. 3 மாசத்துக்கு முன்னாடி கூட டெஸ்ட் பண்ணினோம், அவர் உடம்புல எந்த பிரச்னையும் இல்ல. ஒன்பதே முக்காலுக்கு எனக்கு கால் பண்ணி, பாலாஜி என்னமோ மூச்சு முட்டுது, அடி வயித்துல வலிக்குது, கொஞ்சம் உடனே வர முடியுமான்னு கேட்டாரு. நான் உடனே கார் எடுத்துட்டு வந்து, காவேரி மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனேன். அங்க இருக்க டாக்டர்கள் வொண்டர்ஃபுல்லா வேலை செஞ்சாங்க. வொண்டர்ஃபுல்ன்னா அதுக்கு மேல வார்த்தைகளே கிடையாது.

ஒன்பதே முக்கால்க்கு ஆரம்பிச்சு 2 மணி வரைக்கும் அவங்களால முடிஞ்ச அளவு போராடுனாங்க. ஆனா இது மேஸிவ் அட்டாக். விதி அப்படி முடிவு பண்ணிருக்கு, நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது.

ஸோ, நான் உங்கக் கிட்ட எல்லாம் கேட்டுக்குறது என்னன்னா, அவர் வியாதி வந்து செத்து போனாரு, அவருக்கு பிபி இருக்கு, சுகர் இருக்கு. அவர சரியா கவனிக்கல, டாக்டர்ஸ் சரியா பாக்கல… இந்த மாதிரி விஷயங்களை பரப்பாதீங்க. இது எல்லாமே தவறான தகவல். கடைசி வரைக்கும் ஆரோக்கியமா இருந்தாரு அவர்.

முந்தின நாள் நைட் பெருமாளுக்கு 12 கவிதை எழுதினாரு. இது எதிர்பாராம நடந்த விஷயம். அவருக்கு நடந்தது முழுமையான இயற்கை மரணம்.

அதனால தயவு செஞ்சு யாரும் வதந்தியை பரப்பாதீங்க. இது என்னோட தனிப்பட்ட வேண்டுகோள்” என தன் சகோதரர் மரணத்தில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Crazy mohan brother maadhu balaji clarification

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X